பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்புக்களின் உபயோகம் 10 லட்சம் டன்னுக்கு உயர்ந்துவிட வேண்டும் என்பது திட்டம். இதுவரை ஏற்பட்டுள்ள தொழிற்சாலைகளில் 2 , லட்சம் டன் மட்டுமே தயாரிக்க முடியும். இவைகளிலும், உற்பத் திக்கு அநுமதி பெற்று நிறுவப்பட்டு வரும் தொழிற் சாலைகளிலும் ஆண்டுக்கு 14 லட்சம் டன் உற்பத்தி யாக வேண்டும் என்று தி ட் ட மி ட ப் ப ட் டிருக் கிறது. இரசாயன உர வகையைச் சேர்ந்த அமோனியம் ஸல்பேட்டின் உற்பத்தி 1951-இல் ஆண்டுக்கு 53,000 டன்னக இருந்தது. 1961-இல் 3,88,000 டன்னுக உயர்ந்துள்ளது: சூபர் பாஸ்பேட்டுகள் 61,000 டன்னி லிருந்து 3,64,000 டன்னக உயர்ந்துள்ளன. பயிர் களுக்கும் செடிகளுக்கும் உரமாகக் கூடியவைகளில் நைட்டிரஜன், நவச்சாரம், பாஸ்வரம் கலந்த உப்புக் களோடு, பொட்டாஷியமும் தேவை. பொட்டாஷியம் இதுவரை நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பெறவில்லை. ஆயினும் தமிழ் நாட்டில் உப்பு உற்பத்தி செய்யும் ஒரே தொழிற்சாலை பொட்டாஷியம் குளோரைடும் தயாரிக்க அனுமதிக்கப் பெற்றுள்ளது. இரசாயன உர உற்பத்திக்காக ஸிந்திரி உரங்கள் கெமிகல்ஸ் லிமிடெட் கம்பெனி 1951-இல் நிறுவப்பெற் றது. இதன் பங்குகளில், கம்பெனியின் தலைவர். எட்டு டைரக்டர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்பது பங்கு களைத் தவிர, மற்றவை இந்திய ராஷ்டிரபதியின் பெய ரில் உள்ளவை: இதன் மூலதன அளவு ரூ. 30 கோடி. பீஹார் ராஜ்யத்திலுள்ள ஸிந்திரியில் உரத் தொழிற் சாலை அமைந்துள்ளது. இத் தொழிற்சாலை ஆரம்பம் ■ முதல் வெற்றிகரமாக நடந்து, ஆண்டுக்கு 4 லட்சம் டன் இரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்து வரு கின்றது. உற்பத்திப் பெருக்கத்தினல் உரத்தின் விலை 292 -