பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிற் சாலையை அபிவிருத்தி செய்ய உதவியதுடன் அரசாங்கம் புதிதாக ரூர்கேலா, பிலாய், துர்க்காபூர் ஆகிய இடங்களில் மூன்று பெரிய உருக்குத் தொழிற்சாலை களே அமைத் திருக்கின்றது. பெரிய கர்டர்கள் : முதல் கம்பிகள் வரை நம் நாட்டிலேயே தயாராகி வருகின்றன. 1950-ல் 3:கோடி டன் நிலக்கரி தோண்டியெடுக்கப்பட்டது; இது 1961-ல் 5 ஆகோடி டன்னக உயர்ந்துள்ளது. ஸிந்திரி உரத் தொழிற்சாலை முதல் திட்டத்திலேயே அமைக்கப்பெற்று, நாள் தோறும் உர உற்பத்தி பெருகிவருகின்றது. பங்களூரி லுள்ள டெலிபோன் கருவிகள் உற்பத்திச் சாலையில் 1961-இல் பெருகவேண்டிய அளவு உற்பத்தி 1958-59 லேயே பூர்த்தியாகிவிட்டது. அங்கே ஆண்டுதோறும் ஒன்றேகால் லட்சம் கருவிகள் தயாராகின்றன. ஆந் திராவில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் 1958-59 வரை 24 கப்பல்களைக் கட்டி முடித்திருக் கிறது. மத்தியப் பிரதேசத்திலுள்ள நேபா பேப்பர் மில்லில் மற்ற உயர்தரக் காகிதங்களுடன், பத் திரிகைகளுக்குத் தேவையான 'நியூஸ் பிரிண்ட் காகித மும்,தயாராகின்றது. நாள்தோறும் 70 முதல் 75 டன் வரை அந்தக் காகிதம் உற்பத்தியாகின்றது. ஹிந்துஸ் தான் ஏர்கிராப்ட் தொழிற்சாலையில் விமானங்கள் தயாரிக்கப் பெறுகின்றன. மின்சாரக் கருவிகள் பல போப்பாலில் உற்பத்தி செய்யப் பெறுகின்றன. ட்ரோம் பேயில் எண்ணெய் சுத்தம் செய்யும் இரண்டு தொழிற் சாலைகள் அமைந்துள்ளன: விசாகப்பட்டினத்திலும் புதிதாக ஒன்று 1956-இல் வேலை தொடங்கியுள்ளது. இந்தியாவில் வருடத்திற்கு 30, 000 மோட்டார் கார்களும், அதே அளவு டிரக்குகளும் உற்பத்தியாகின் றன. இப்பொழுது வருடத்திற்கு ரூ. 500 கோடிக் குத் தயாராகும் இயந்திரங்கள் 1970-71 க்குள் 277