பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறுத்த எல்லை 470 மைல் நீளமுள்ளது. அந்தக் கோட்டுக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் படைகள் அடிக்கடி அத்துமீறி உள்ளே நுழைந்து, சுடுவதும், கொள்ளையிடுவதும், கொலைகள் செய்வதும் வழக்க மாக நடந்து வருகின்றன. 1949 ஜனவரியிலிருந்து 1965 ஆகஸ்டுவரை 17 வருடங்களில் பாகிஸ்தான் 6,058 முறை போர் நிறுத்த எல்லைக்கு இந்தப் பக்கம் ஆக்கிரமிப்புச் செய்துள்ளது. மொத்தம் நாட்கள் 6,000. தான். ஆனல் ஆக்கிரமிப்பு 6,0581 ஆக்கிர மிப்புகள்பற்றி இந்திய அரசாங்கம் அவ்வப்பொழுது ஐ. நா.வுக்குத் தகவல் கொடுத்துக்கொண்டே வந் துள்ளது. கட்ச் ஆக்கிரமிப்பு மேற்கு இந்தியாவில் குஜராத்தில் கட்ச் மாவட் டம் இருக்கின்றது. அது முன்னல் ஒரு சுதேச சமஸ் தானமாக இருந்தது. அந்தச் சமஸ்தானம் இந்தியா வுடன் இணைந்துவிட்டது. அது கடலோரத்தில் இருப்பதால் சதுப்பு நிலமாகவுள்ளது. பருவக்காலங் களில் அங்குக் கடல்நீர் தேங்கி நிற்பதும் உண்டு. அந்தச் சதுப்பு நிலத்தின் வடகோடியில் சிந்து மாகா ணம் இருந்தது. அதற்கும் சிந்துவுக்கும் இடையில் பிரிட்டிஷார் காலத்திலேயே எல்லை தெளிவாக வகுக் கப்பெற்றிருந்தது. எல்லே முழுவதிலும் துண்களும் நிறுத்தப்பட்டிருந்தன. சிந்து மாகாணம் பாகிஸ்தா னுடன் சேர்த்துப் பிரிக்கப்பட்ட பின்பும் முந்திய எல் லேப் பாகுபாடு அப்படியே யிருந்தது. இந்த எல்லைக்கு ஆதரவாகப் பிரிட்டிஷார் தயாரித்துவைத்த தஸ்தா வேஜுகளே ஏராளமா யிருக்கின்றன. எனினும் கட்ச் பாகிஸ்தான் எல்லைக்கோடு சரியானதன்று என்பது பாகிஸ்தானின் வாதம். 344