பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 டிருக்கின்றது. கியூபாவின் அதிபர் காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் நாடுகளிலிருந்து ரூ. 130 கோடிக்கு மேல் பெறுமானமுள்ள ஆயுதங்களே வாங்கி வைத்திருக்கிறார். பழைய பட்டாளங்களே நம்பாமல், புதிதாக ஐந்து லட்சம் தொழிலாளர், குடியானவர்களைக் கொண்டு செஞ்சேனை ஒன்றை அமைத்துக் கொண்டு வருகிறார். அவருக்கு நாட்டில் எதிர்ப்பும் வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் கியூபாவைக் கருவியாக வைத்துக் கொண்டு அமெரிக்காவை எதிர்க்காமல் விலகியது குற்றம் என்று சீன ரஷ்யாவைக் கண்டிக்கின்றது.

ரஷ்ய மக்களின் நிலை

இன்றைய ரஷ்யா லெனின் காலத்துப் புரட்சிகரமான நாடன்று; ஸ்டாலின் காலத்தில் பெட்டிப் பாம்பு போல் அடங்கி, இட்ட பணிகளை யெல்லாம் நிறைவேற்றி வந்த நாடு மன்று. ஒரளவு சுகமான வாழ்க்கையை விரும்பும் நாட்டையே நாம் காண்கிறாேம். அதற்கேற்றபடிதான் தலைவர் குருஷ்சேவும் நடந்து கொள்ள முடிந்தது. ரஷ்ய மக்களும், அவர்கள் தலைவரும் போரில்லாத சமாதானத்தையே விரும்புகின்றனர். மற்ற நாட்டார்களைப் போலவே மூன்றாவது உலகப் போருக்கு அவர்களும் அஞ்சுகின்றனர். எனவே குருஷ்சேவ் மேலை நாடுகளுடன் ‘சமாதான சகவாழ்வு’க் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தார். முதலாளித்துவ நாடுகளுடன் சக வாழ்வு கூடாது என்றும், அவைகளுடன் போராடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றும் சீனா கூறிற்று.

சீன ரஷ்ய உறவு நீடித்து நிற்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆயினும் அவைகளுக்குள் போட்டியும் பூசலும் ஏற்படுவதற்கும் போதிய காரணங்கள் இருக்கின்றன. ஒற்றுமை நிலவுமா, பூசல் விளையுமா

189