பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய பாரதம் ஆங்கிலேயர் வெளியேறி, பாரதக் குடியரசு ஏற் பட்டதுடன் நம் தேசியப் புரட்சி நிறைவேறிற்று. பொருளாதார, சமுதாயப் புரட்சி அதிலிருந்து தொடங்கியுள்ளது. அந்நிய ஆட்சிக்கு உறுதுணையாயிருந்த சுதேச சமஸ்தானங்கள் முதலில் ஒழிக்கப் பெற்றன. அடுத் தாற்போல் 1949-இலிருந்து 1955-க்குள் பல ராஜ்யங் களிலும் ஜமீன்கள் ஒழிக்கப் பெற்றன. யதேச்சாதி கார அரசாங்கங்களைப் போல் நம் அரசியல் சட்டத் தின் கீழ் நினைத்ததை யெல்லாம் செய்ய முடியாது. எவருடைய சொத்தையும் காரணமில்லாமல் பிடுங்கிக் கொள்ள இயலாது; தக்க ஈடு கொடுக்காமல் அரசாங் கம் எதையும் பெறமுடியாது. மக்களுக்குப் பாதுகாப் பாக அமைந்த அச்சட்டத்தின் விதிகளைப் பல ஜமீன் தார்கள் தங்களுக்கும் காப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, நீதித் தலங்களிலே வழக்காடினர்கள். இதல்ை அரசியல் சட்டத்தையே திருத்த நேர்ந்தது. பஞ்சாபிலிருந்து தமிழ்நாடுவரை ஜமீன்தார்களுக்கு மொத்தம் ரூ. 450 கோடி நஷ்ட ஈடு கொடுக்கத் தீர் மானிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து பெற்ற நிலங் கள் நேரிடையாக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டன. அந்நிலங்களின் வரியில் ஆண்டுதோறும் ரூ. 40 கோடி வருவதைக் கொண்டு 10, 12 வருடங்களில் நஷ்ட ஈட்டுத் தொகையை ஈடு செய்து கொள்ளலாம் என்று கருதப்பட்டது. ஜமீன்தார்களுக்கு நஷ்ட ஈடு முழு வதையும் மொத்தமாக முன்னதாகக் கொடுக்காமல், முதலில் கொஞ்சம் ரொக்கமாகக் கொடுத்து, எஞ்சிய தைச் சுமார் 20 ஆண்டுகளில் பெற்றுக் கொள்ளும்படி கடன் பத்திரங்களாகக் கொடுக்கப் பெற்றன. 327