பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கும் இந்தியாவுக்கும் சமரசம் ஏற்படும் வகைக்கு முயற்சி செய்ய வேண்டும் என்று இந்தியப் பிரதம மந்திரியும், பாகிஸ்தான் பிரதமர் தளபதி ஆயூப்கானும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

சீன-இந்தியப் போராட்டத்தில் உலகில் பெரும் பாலான நாடுகள் இந்தியாவுக்கு அனுதாபமாக இருந்தன. கம்யூனிஸ்ட் நாடுகளின் ஆதரவுகூடச் சீனாவுக்குக் கிடைக்கவில்லை. மேலும், அல்பேனியா நீங்கலாக மற்றக் கிழக்கு ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் நாடுகள் சீனாவை வன்மையாகக் கண்டித்தன. ஐக்கிய அரபுக் குடியரசுத் தலைவர் திரு. நாஸர் இந்தியாவை ஆதரித்து, சீனா தன் படைகளை வாபஸ் பெறவேண்டுமென்று யோசனை கூறினர். சமாதானத்திற்காக நான்கு பிரிவுகள் கொண்ட ஒரு திட்டத்தையும் அவர் இரு நாடுகளுக்கும் அனுப்பியிருந்தார். அதன்படி உடனே சண்டையை நிறுத்தவேண்டும் ; இரு பக்கத்துப் படைகளும் போர் தொடங்கிய அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்பிச் செல்லவேண்டும்; இரு திறத்தாருக்கும் நடுவில் படைகளே யில்லாத சூனியப் பிரதேசமாக ஒரு பகுதி இருக்க வேண்டும்; அமைதியான முறைகளில் எல்லைப் பிரசினைகளைப் பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும். இந்தப் பிரேரணைகளை இந்தியா ஒப்புக்கொண்டிருந்தும், சீனா ஏற்றுக்கொள்ளவில்லை.

கொழும்பு மகாநாட்டுப் பிரேரணைகள்

ஆசியப் பெருநாடுகளான இந்தியாவும் சீனாவும் பொருதிக்கொண் டிருப்பதை நிறுத்தி இரண்டும் அமைதியான முறையில் கூடிப்பேசி எல்லைப் பிரசினைகளைத் தீர்த்துக்கொள்ள வழி செய்ய வேண்டுமென்று இலங்கை, ஐக்கிய அரேபியா, பர்மா, கம்போடியா, இந்தோ