பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய பாதுகாப்பு மந்திரி திரு. சவான், முதற் களபலி மார்க்ஸிலம்-லெனினிஸம் என்று வேறு மொழியில் சொல்லியிருக்கிரு.ர். இதுவரை இந்தியாவில் பல படிப் பாளிகளும், தீவிரவாதிகளும், தத்துவ பூர்வமாகக் கம்யூனிஸம் பற்றிப் படித்தும், பேசியும் வந்தனர். சீனப்படையெடுப்பைப் பார்த்ததும், நடைமுறையில் கம்யூனிஸம் என்ன என்பதைக் கண்டு, அவர்கள் வெறுப்படைந்து விட்டனர். நமது வெளி நாட்டுக் கொள்கையை அநுசரித்தே நம் பாதுகாப்பும் அமையும் என்பதால், நாம் உறவு கொள்ள வேண்டியவர்களையும், விட்டு நீங்க வேண்டிய வர்களையும் பற்றி மேலே கூறப்பட்டது. அமெரிக்கா வுக்கும் இந்தியாவுக்கும் பொதுவான அடிப்படைகள் பல இருக்கின்றன. இரண்டும் ஜனநாயக முறையி லுள்ள அரசாங்கங்களைப் பெற்றிருக்கின்றன. கீழ்த் திசையிலும், துரக் கீழ்த் திசையிலும் கம்யூனிஸ்ட் சீன மேலோங்கி வளர்ந்தால், உலகுக்கே தீங்கு அதிகரிக் கும் என்பது இரண்டுக்கும் பொதுவான கொள்கை. இந்தியாவின் தொழிற் பெருக்கத்திற்கு அமெரிக்கா பெரும் பொருளை வழங்கியிருப்பதோடு, நிபுணர்களை யும் அனுப்பியுள்ளது. இந்தியப் பாதுகாப்புக்கு உடனடியாகத் தேவையான விஷயங்களிலும், பின்பு நிரந்தரமாகத் தேவைப்படும் விஷயங்களிலும், அமெரிக்கா அதுதாபத்துடன் அக்கறையும் கொண் டுள்ளது. கிழக்கே இந்திய நாடு வல்லமை பெற்று விளங்கினுல்தான், சீன வைச் சமாளித்து நிறுத்த முடி யும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. சீனுவின் கை ஓங்கிவிட்டால், அமெரிக்காவுக்கும் நஷ்டம்தான். இந்தியாவுக்கும் அ .ெ ம. ரி க் கா வு க் கு ம் உள்ள வேற்றுமை ஸோஷலிஸம் ஒன்றுதான். ஆயினும் நாம் ஸோவுலிஸம்" என்ற பெயரில் செய்யும் சில காரியங்கள் 364