பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 னிஷியா, கானா ஆகிய ஆறு ஆசிய - ஆப்பிரிக நாடுகளின் அரசாங்கங்களின் பிரதிநிதிகள் டிசம்பர் மாதம் 10-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை இலங்கைத் தலைநகரான கொழும்புவில் கூடி ஆலோசித்தனர். அவ்வாறு கூடியவர்கள் இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டார நாயக அரபுக் குடியரசுப் பிரதமர் (அரசாங்க நிர்வாக சபைத் தலைவர்) அலி ஸாப்ரி, பர்மியப் பிரதமர் தளபதி கெவின், கம்போடிய இளவரசர் லிஹானுக், இந்தோனீஷிய அயல் நாட்டு மந்திரி டாக்டர் பாங் திரியோ, காவிைன் நிதி மந்திரி அஃபோரி ஆட்டா ஆகியவர்கள். அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் முதலிய கூறுவதற்கு இந்திய, சீன அரசாங்கங்கள் தத்தம் அதிகாரிகளே அனுப்பியிருந்தன. மகாநாடு, சீனவுக்குக் கோபம் வராமலும், இந்தியாவுக்குத் தீங்கு நேராமலும், நடுநிலைமையான வழிபற்றி விவாதம் செய்து, சில பிரேரணைகளை முடிவு செய்தது. அவைகளை உடனே வெளியிடாமல், அந்தரங்கமாகச் சீன, இந்திய அரசாங்கங்களுக்கு மட்டும் தெரிவித்து, அவைகளின் சம்மதம் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிரிமாவோவும், டாக்டர் சுபாந்திரியோவும் பீகிங் சென்று மகாநாட்டுப் பிரேரணைகளைச் சீனப் பிரதம மந்திரிக்கும், கம்யூனிஸ்ட் தலைவர் மாஸே-துங்குக்கும் விளக்கிச் சொல்லினர். பின்னர் சிரிமாவோவும், அலி சாப்ரியும், அஃபோரி ஆட்டாவும் புதுடில்லிக்கு வந்து இந்தியப் பிரதம மந்திரியிடம் அவைபற்றி விவாதித்தனர். பின்னர் கொழும்பு மகாநாட்டுப் பிரேரணைகள் பத்திரிகைகளில் வெளியிடப்பெற்றன.

கொழும்புப் பிரேரணைகளும் விளக்கங்களும் குறித்த முக்கியமான அம்சங்கள் இவை :

1. மேற்கே லடாக் பகுதியில் சீனப் படைகள் 20 கிலோமீட்டர் (12 மைல்) பின்னால் தள்ளிச் செல்ல

111