பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்பது இரு நாடுகளின் நடத்தையைப் பொறுத்திருக்கின்றது.

ஸ்டாலினுக்குப் பின்னால் குருஷ்சேவின் தலைமையில் ரஷ்யாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இம் மாற்றங்கள் ஏற்படாதபடி நெடுநாளாகத் தடுத்து வந்தது ஸ்டாலின் சர்வாதிகாரம். பெரும்பாலான மக்கள் பூரணமான சர்வாதிகாரத்திலிருந்து ஒரளவு விடுபட்டிருக்க ஆவல் கொண்டிருந்தனர். நிலைமையை அறிந்து குருஷ்சேவும் பழைய முறைகளை மாற்றி விட்டார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்ய மக்கள் தாய்நாட்டிற்காகவும், கம்யூனிஸத்திற்காகவும் பெருந்தியாகங்கள் செய்து, தாங்கொணாத கொடுமைகளை யெல்லாம் தாங்கி வந்தனர். 1953-க்குப் பின் அவர்கள் நன்றாக மூச்சு வாங்க அவகாசம் கிடைத்தது. ஒரளவு சுதந்தரத்தை அது பவித்த பிறகு, இப்பொழுது அவர்கள் மேற்கு ஐரோப்பிய நாட்டினர்களைப் போலச் சுகவாழ்வு வாழ விரும்பினால் ஆச்சரியமில்லை. கொள்கைக்காக முன்போல் அவர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்வார்களென்று இனி எதிர்பார்க்க முடியாது.

சீனக் கம்யூனிஸம்

ஆனால் சீன கம்யூனிஸ்ட் பாதையில் பூரணமாக இறங்கிப் பதினாறு ஆண்டுகளே ஆகின்றன. அதனால் சீனக் கம்யூனிஸ்டுகள் இளமை வெறியுடன், துடுக்கும் மிடுக்கும் பெற்றிருப்பதும் இயல்புதான்.

சீனாவுக்கும் ரஷ்யாவுக்குமுள்ள கொள்கை வேற்றுமைகள் கியூபா நிகழ்ச்சியிலிருந்து மட்டும் ஏற்பட்டவையல்ல. ரஷ்யக் கம்யூனிஸத்திற்கும் சீனக் கம்யூனிஸத்திற்கும் அடிப்படையிலேயே வேற்றுமையுண்டு. பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தின் மூலமே கம்

190