பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயத்தில் முதல் திட்டத்தின் பயனுக விளைவு 17% அதிகரித்தது. இரண்டாவது திட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் விளைவு குறைந்து விட்டது, ஆயினும் மொத்தத்தில் 16% விளைவு கூடியிருந்தது. சமுதாய நல அபிவிருத்தி கிராமப் பகுதிகளிலுள்ள மக்களின் நலனுக்காக முதல் திட்டத்திலேயே சமுதாய நல அபிவிருத்தி இலாகா அமைக்கப் பெற்றது. இரண்டாவது திட்ட இறுதியில் 3,70,000 கிராமங்கள் சேர்ந்த 3,100 அபிவிருத்தி வட்டாரங்கள் (பிளாக்குகள்) ஏற்பட் டிருந்தன. மொத்தம் 59,000 கிராம ஊழியர்களும் அதிகாரிகளும் இவைகளில் தொண்டு புரிந்து வந்தனர். இரண்டு திட்டங்களிலும் சமுதாய நல அபிவிருத்திக் காக ரூ. 240 கோடி செலவிடப்பட்டது. இப்போது கி ரா ம ப் பஞ்சாயத்துக்களும் அமைந்திருப்பதால், வட்டார அபிவிருத்தி மேலும் வளர்ச்சியடைந்துள் வளது. மொத்தம் அநுமதிக்கப்பெற்றிருந்த 5, 223 பிளாக்குகளில் இப்பொழுது 5, 149-இல் வேலை நடக் கின்றது. எனவே கிராமப் பகுதியில் 99% இடங்களில் அபிவிருத்தி வேலைகள் தொடங்கி யிருக்கின்றன. கூட்டுறவு கூட்டுறவு இயக்கம் மிகுந்த வளர்ச்சி யடைந்துள் ளது. அதன் அபிவிருத்தி வருமாறு : 1950-51 1960-61 பிரதம விவசாயக கூட்டுறவுச் சங்கங்கள் 1,05,000 2,10,000 அங்கத்தினர்கள் தொகை 44 லட்சம் 170 லட்சம் விநியோகித்த கடன் தொகை ரூ. 23 கோடி ரூ. 200 கோடி 27.2