பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசேடக் காரணங்கள் உண்டு. அங்கு ஜனத்தொகை சுருக்கம், விளை நிலங்கள் மிகுதி. ** * ஃபிரான்ஸ் தேசத்தில் தேசிய முறை வெகுகாலத் திற்கு முன்பிருந்தே நிலைத்து வந்துள்ளது. போர்த் தளவாடங்களின் உற்பத்தி, ரயில்வேக்கள், நாட்டின் வடபகுதியிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்கள், கியாஸ், மின்சார உற்பத்தியும் விநியோகமும் முதலியவைகளை அரசாங்கம் நடத்திவருகிறது. இன்ஷாரன்ஸ், பாங்குத் தொழிலில் பெரும்பகுதிதேசியமாகியுள்ளன. தொழில் கள் பலவற்றை அரசாங்கம் நடத்துவதில் நூற்றுக்கு மேற்பட்ட கம்பெனிகள் இருக்கின்றன. ஆ ைல் பொதுத்துறை ஸ்தாபனங்களால்தான் அரசாங்கத் திற்குப் பண முடைகள் ஏற்படுவதாயும், இவைகளிலே சிலவற்றையாவது உதறிவிடுதல் நலமென்றும் சில பிரெஞ்சு அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தாலியில் பெரிய தொழில்களில் முடக்கப்பெற் றிருக்கும் மூலதனத்தில் பாதிஅரசாங்கத்தினுடையது. நார்வே, ஸ்வீடன் ஆகிய மேற்கு ஐரோப்பிய நாடுகளி இலும் தேசிய உடைமைத் தொழில்கள் அதிகமாயுள்ளன. 1956-இல் எகிப்திய அரசாங்கத் தலைவர் கர்னல் நாஸர் சூயஸ் கால்வாயைத் தேசிய உடைமையாக்கினர். அதல்ை கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மாபெரும் "அஸ்வன்' அணையைக் கட்டி முடிக்க வேண் டும் என்பது அவர் கருத்து. ஃபிரான்ஸும் இங்கிலாந் தும் கால்வாயைத் தேசியமாக்கும் திட்டத்தை எதிர்த் தன. ஆயினும் முடிவில் அது தேசிய உடைமையாக்கப் பட்டுவிட்டது. பாகிஸ்தானில் 1950 முதல் பொதுத் துறையில் தொழில்கள் அமைக்க ஏற்பாடாயிற்று. உருக்கு, இரசாயன உரம், சணல், சிமிண்டு முதலிய வற்றின் உற்பத்தியில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. 26 &