பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 போர்க்கருவிகள் விமானங்களின் மூலமாகவே இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பெற்றன. கானடா 6 விமானங்களை அனுப்ப ஏற்பாடு செய்தது. ஆஸ்திரேலியா 18 லட்சம் டாலர் பெறுமானமுள்ள யுத்த தளவாடங்களைக் கடகை அனுப்ப ஏற்பாடு செய்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் பல நாள் ஆலோசித்த பின்பு சீன ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்தது. எனினும் தாய்நாட்டின் மீது படையெடுத்து வந்த சீனரை ஆதரிப்பவர்களும் அக்கட்சியில் இருந்த தாலும், படையெடுத்தது கம்யூனிஸ்ட் சீன என்பதாலும், மக்கள் அக்கட்சியிடம் அளவற்ற வெறுப்புக் கொண்டிருந்தனர்.

நாட்டின் விழிப்பு

சீனப் படையெடுப்பினால் பாரத நாடு முழுதுமே விழித் தெழுந்துவிட்டது. அரசியல் கட்சிகள் தம் வேற்றுமைகளையும், பிணக்குகளையும் ஒதுக்கிவிட்டு, போரைத் திறமையாக நடத்தும் ஒரே நோக்கத்துடன் ஒன்று சேர்ந்தன. மக்கள் நாட்டின் பாதுகாப்பு நிதிக்காகப் பொன்னும் பணமும் அள்ளிக் கொடுத்தனர். நாடெங்கும் பொதுக் கூட்டங்களும், ஊர்வலங்களும் நடந்துவந்தன. போரில் பங்கு கொள்வதற்காகப் படைகளில் சேருவதற்குப் பல்லாயிரம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக முன்வந்தனர். எங்கனும் ஊக்கமும் உறுதியும் தென்பட்டன.

வலாங்கின் வீழ்ச்சி

இவையெல்லாம் நீடித்த பெரும் போரிலே எந்த எதிரிகளையும் விரட்டுவதற்கு ஏற்ற முறையில் திரண்

105