பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிருப்பதால், இந்த நீர் நேரடியாகப் பாசனத்திற்கு அதிகமாக உபயோகமாகவில்லை. ஆயினும் இதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பயன்படுத்தி ஆயிரக் கணக்கான குழாய்களின் மூலம் பூமியிலிருந்து நீர் இறைக்கப்படுகின்றது. இந்த முறையில் உத்தரப் பிரதேசத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கும், பீஹா ரில் 5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கும் நீர் கிடைக்கும். இந்த அணையிலிருந்து 3 லட்சம் கிலோவாட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அணை கட்டி முடிக்க ரூ. 45 கோடிக்குமேல் செலவாகியுள்ளது. கோலி அணை. பீஹாரின் வட பகுதியில் அமைந் துள்ள கோஸி ஆற்றின் அணை பல வழிகளில் சிறப்புப் பெற்றது. இதில் காங்கிரீட் பகுதி 3,769 அடிதான், மண் அமைப்பு 4 மைல் நீளம். ஆனல் கீழ்ப்பக்கத் திலும் மேற்பக்கத்திலும் 75 மைல் நீளத்திற்குச் சுமார் 15 அடி உயரத்தில் வெள்ளத்தைத் தடுக்கும் கரைகள் அமைந்துள்ளன. இந்த இரு கரைகளுக்கும் இடையில் 3 மைலிலிருந்து 10 மைல்வரை இடைவெளி இருக் கின்றது. பாரத் சேவக் சமாஜ'த்தின் முயற்சியால் பல்லாயிரம் குடியானவர்கள் இந்த அணை அமைக்க உழைத்தார்கள். எதிர்பார்த்த செலவு ரூ. 18 கோடி யில், ரூ. 16 கோடியிலேயே வேலை முடிந்துவிட்டது. கிழக்குப் பகுதியில் கால்வாய் தயாராகியுள்ளது. இனி மேலேப் பகுதியில் ஒரு கால்வாய் அமையும். அந்தப் பிரதேசத்திற்கான மற்றும் பல வேலைகளைச் சேர்த்து மொத்தம் ரூ. 45 கோடி செலவாகி யிருக்கின்றது. கோளி ஆற்றின் வெள்ளத்தினல் பல சமயங்களில் நேர்ந்துவந்த பெரும் பொருட் சேதமும் உயிர்ச் சேத மும் இந்த அணையால் நிறுத்தப்பட்டிருக்கின்றன. 1934-இல் ஏற்பட்ட பீஹார் பூகம்பத்திற்குப்பின் இந்த ஆற்றின் வெள்ளப் பெருக்கால் செழிப்பான இ. சீ. பா.-20 3.05