பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வுக்கும் போம்டிலாவுக்கும் 70 மைல் தூரம். அவற்றி னிடையே யிருந்த சாலையைச் சீனர் கத்தரித்து விட்டனர்.

சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கம் போரைத் தாகை எப்படித் திடீரென்று தொடங்கியதோ, அதே போல் நவம்பர் 21-ந் தேதி நடு நிசியிலிருந்து போர் நிறுத்தம்செய்யப்படும் என்று தானகவே அறிவித்தது. டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து சீன எல்லைப் புறக் காவலர்கள் 1959, நவம்பர் 7-ந்தேதி தம் ஆதிக்கியப் பகுதியாயிருந்த எல்லையிலிருந்து 20 கிலோ மீட்டர் (12½ மைல்) பின்னல் தள்ளிச் செல்வார்களென்றும் அறிவிக்கப்பட்டது. (படையெடுத்து வந்து யுத்தம் செய்த சீனப் படைகளைத்தான் ‘எல்லைப் புறக் காவலர்கள்’ என்று சீன அரசாங்கம் தெரிவித்தது!) நவம்பர் 21-ந் தேதி நள்ளிரவிலிருந்து போராட்டம் நின்றது. பின்னல் படிப்படியாகச் சீனப்படைகள் பின்வாங்கிச் சென்றன.

பாரதத்தின் விழிப்பு

பம்பாய் ராஜ்யத்தில் ஆறு ஆண்டுகள் முதன் மந்திரியாயிருந்து புகழ்பெற்ற ஒய். பி சவான் இந்தியப் பாதுகாப்பு மந்திரியாக நியமிக்கப் பெற்றார். வீரம் மிக்க இந்த மராட்டியர் பதவிக்கு வரவும், போர் நிற்கவும் சரியாக இருந்தது. மகாராஷ்டிரத்திலிருந்து புறப் படும்போதே நமது புதிய பாதுகாப்பு மந்திரி, வாகை சூடியே திரும்பி வருவதாகவும், இல்லையெனில் உயிருடன் திரும்புவதில்லை என்றும் உறுதி கூறியே டில்லிக்குச் சென்றார். பழைய சேனாபதி திரு பி.என். தாபர் உடல் நலமின்மையால் பதவியை இராஜினாமா செய்தார். பிறகு தளபதி ஜே. என். செளதரி இந்தியப் படைகளின் சேனபதியானர். இரண்டாவது உலகப் போரில்

108