பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஆறு மடங்கு அதிகமாகச் சீனரும் இருக்கின்றனர். சட்டப்படி மங்கோலியர்களுக்குச் சுயாட்சி கொடுக்கப் பட்டிருந்தும், அரசியல் தந்திரத்தால் அவர்கள் ஜனத்தொகையில் சிறுபான்மையினராகச் செய்யப்பட்டுள்ளர்.

வெளி மங்கோலியாவிலுள்ள மக்களுக்குத் தங்களைச் சேர்ந்த ஆசியச் சீனர்களைப் பார்க்கினும் மாஸ்கோவிடமே பற்றும் நம்பிக்கையும் அதிகம். ஆயினும் காலக்கிரமத்தில், எத்தனையோ மாறுதல்கள் ஏற்படுகையில், இனம் இனத்தோடேயே சேர்ந்து கொள்ளவும் கூடும். வெளி மங்கோலியாவும் உள் மங்கோலியாவும் சேர்ந்து கொண்டாலும், ஒன்று சேர்ந்த முழுமங்கோலியா மாஸ்கோவுடன் இருப்பதா, பீகிங்குடன் இருப்பதா என்ற பிரசினை எழும்.

ஸிங்கியாங் : இது சீனாவின் வடமேற்கு எல்லையிலுள்ள மாகாணம். ஸிங்கியாங் என்ற பெயருக்குப் ‘புது எல்லை’ என்று பொருள். இதைச் சீனத் துருக்கி ஸ்தான் என்றும் குறிப்பிடுவதுண்டு; ஏனெனில் ரஷ்யத் துருக்கிஸ்தான் வேறு இருக்கின்றது. இந்த மாகாணத்தில் பனிக்கட்டி மூடிய பல மலைத்தொடர்களும், நெடிய பாலைவனங்களும் இருக்கின்றன. இது சீனாவின் ஆறில் ஒரு பகுதியாகும்; ஃபிரான்ஸ் நாட்டைப்போல் இது மும்மடங்கு பெரிது. பண்டைக்காலம் முதல் சீனா, இந்தியா, மேற்கு ஆசியப் பகுதிகளுக்குள் வர்த்தகத் தொடர்பும், கலைத்தொடர்பும் இந்த மாகாணத்தின் வழியாகவே நிகழ்ந்து வந்தன.

ஸிங்கியாங்கிலுள்ள மக்களில் பெரும்பகுதியினர் சீன இனத்தைச் சேராத முஸ்லிம்கள். மாெழி வழியாக அவர்களுக்கு ரஷ்யத் துருக்கிஸ்தான் மக்களுடனேயே அதிகத் தொடர்புண்டு. ஸிங்கியாங் ஜனத்தொகையான 48, 70,000-த்தில் 36,00,000 மக்கள்

198