பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமார் 640 லட்சம் டன் கிடைத் திருக்கின்றது. முக் கியமாக நிலக்கரிக் கணிகள் அதிகமாயுள்ள பீஹார், வங்காள ராஜ்யங்களில் ரயில்வே போக்குவரத்து வசதி கள் போதிய அளவிலில்லை. அதிக வாகன்களை அளித்து இக்குறையை நீக்கினல், உற்பத் தி பெருகும். மத்தியப் பிரதேசத்தில் இத்தகைய இடர்ப்பாடுகள் இல்லாத தால், அங்கும் அதிக நிலக்கரி எடுக்கலாம். மற்றும் பல இடங்களிலே சிதறிக் கிடக்கும் கனிகளில் மேலும் தீவிரமாக வேலை செய்வதற்கு அரசாங்கம் தனியார் களுக்கு நிதி உதவிகள் செய்தும் உற்பத்தியைப் பெருக்க முடியும். மொத்தத்தில் வெடி மருந்துகள், இயந்திரங்களுக்குத் தேவையான தனி உறுப்புக்கள், புதுக் கருவிகள், மின்சாரம், வாகன்கள் ஆகியவைகள் போதிய அளவில் இல்லாமலே ஒரே ஆண்டில் 80 லட் சம் டன் நிலக்கரியைக் கூடுதலாக உற்பத்தி செய்ய முடிந்ததென்ருல், எல்லாச் சாமான்களும் முறையாகக் கிடைத்து வந்தால் இன்னும் உற்பத்தி பெருகும். 1962-இல் நாள்தோறும் 6,363 வாகன்களை நிலக்கரிக் காக நம் ரயில்வேக்கள் ஒதுக்கி யிருந்தன. இவைகளை யும் கூடுதலாக்க வேண்டும். நல்ல நிலக்கரிக்கு நாட்டில் இருக்கும் கிராக்கி யினல் லிக்னைட்’ என்ற பழுப்பு நிலக்கரி கிடைப்பதை எடுத்துப் பக்குவப்படுத்திக் கொள்வது நலமாயிற்று. தமிழ் நாட்டில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் நெய்வேலியில் கனிகளில் பூமிக்கு அடியில் 100 சதுர மைல்களுக்கு மேலான பரப்பளவில் 55 அடி கனத்திற் குப் பழுப்பு நிலக்கரி இருக்கின்றது. ஆனல் நிலக்கரிப் பாளங்களுக்கு மேலே சுமார் 180 முதல் 200 அடி வரை அமைந்துள்ள மண்ணை அப்புறப் படுத்தியே கனி களை வெட்ட முடியும். அப்படி வெட்டி யெடுப்பதற். காக அரசாங்கம் நெய்வேலி லிக்னேட் கார்ப்பரேஷனை . சீ. பா.-19 H 2 & 9 இ