பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கொண்டு தொழிலை வேறு சில பிராந்தியங்களில் பிரித்து நடத்த வேண்டுமென்றும், தென்னட்டிலும், கடற்கரை ஓரங்களிலும் உருக்குத் தொழிற்சாலை கள் அமைக்க வேண்டுமென்றும் அபிப்பிராயம் கூறி யுள்ளார். i 1948-இல் 15 லட்சம்டன் உருக்கு உற்பத்தியானதி லிருந்து 1962-இல் மொத்தம் 60 லட்சம் டன் உருக்குக் கட்டிகள் உற்பத்தி செய்யப் பெற்றிருக்கின்றன. கிலக்கரி நம் தொழில்கள் அனைத்திற்கும் நிலக் கரி அடிப்படையாக அமைந்துள்ளது. ஆயினும் நாட் டின் அளவுக்கும், மக்களின் தொகைக்கும் தக்கபடி இன்னும் போதுமான அளவு நிலக்கரி எடுக்க முடிய வில்லை. உலகில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா ஆருவ தாகவே நிற்கின்றது. அமெரிக்க ஐக்கிய நாடு, ஸோவியத் ரஷ்யா,8இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, போலந்து ஆகிய ஐந்து நாடுகளும் இந்தியாவைவிடக் கூடுதலாக நிலக்கரி வளத்தைப் பெருக்கி வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உபயோகமாகும் நிலக்கரி நபர் 1-க்கு 8 டன், இங்கிலாந்தில் 4; டன், இந்தியா வில் டன். இந்நிலை மிக வேகமாக மாருவிட்டால், நாம் பெருந் தொழில்களில் முன்னேற முடியாது, 1960-61-இல் இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 548 லட்சம் டன். இதில் 443 லட்சம் டன் தனியா துறையிலும், 105 லட்சம் டன் பொதுத்துறையிலும் வெட்டி யெடுக்கப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டப்படி இது முறையே 450 லட்ச மாகவும், 150 லட்சமாகவும் இருந்திருக்க வேண்டும். 'எனவே திட்டக் குறிக்கோளிலிருந்து 52 லட்சம் டன் குறைவாகவே கிடைத்திருக்கின்றது. 1961-62-இல் 560 லட்சம் டன் கிடைத்திருக்கின்றது. மூன்ருவது திட்டத்தின் முதல் ஆண்டான 1962-63-ல்தான் 288