பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தெளலத் பெக் ஓல்டி

லடாக்கில் காரகோரம் கணவாய்க்குப் பாதுகாப் பாயிருந்த தெளலத் பெக் ஓல்டியிலுள்ள காவல் நிலையத்தை இந்தியப் படைகள் காலி செய்தன. சுஷு-ல் நகரைச் சுற்றிலும் சீனப்படைகள் பீரங்கிகளால் பலமாகத் தாக்கிவந்தன. இத்துடன் சீனர்கள் லடாக்கில் தங்களுடையது என்று கூறி வந்த 14,000 சதுர மைல் அளவுள்ள பிரதேசம் அவர்கள் வசமாகிவிட்டது.

ஸாே-லா கணவாய்

ஸாே-லா என்ற கணவாய்க்குச் செல்லத் தேஜ்பூரிலிருந்து ஜீப் கார் செல்லும் பாதை ஒன்றுதான் உள்ளது. நெடிய மரங்களடர்ந்த வனங்களின் ஊடே 10, 000 அடி உயரத்திற்கு ஏறி, மறுபக்கம் 5,000 அடி உயரத்தில் சமவெளியிலிருந்த போம்டிலா நோக்கிச் சரிவான பாதையில் இறங்கிச் செல்ல வேண்டும். அங்கிருந்து மீண்டும் மேலேறி, 13, 55.6 அடி உயரத்தி லுள்ள ஸாே-லா வை அடைய வேண்டும். பனியாலும், மழையாலும் பாதை முழுதும் சேறாகியிருந்தது.

ஸே - லாவில் அமைத்திருந்த நம் பீரங்கிகள் இருக்கு மிடங்களைச் சீனர்கள் நன்கு தெரிந்து கொண்டு முதலில் அவைகளின் மீது குண்டு மழை பொழிந்து, அவைகள் செயலற்றுப் போகும்படி செய்தனர். நவம்பர் 18-ந்தேதி ஸாே-லா வீழ்ச்சியுற்றது. பின்னர் பல்லாயிரம் சிப்பாய்கள் அடங்கிய படைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கடல் அலைகள் போல அணி வகுத்துப் போம்டிலா நோக்கி வேகமாகச் செல்லும்படி சீனர் அனுப்பிவைத்தனர். ஸாே-லாவிலிருந்த நமது பெரும்படையைச் சந்திக்காமலே, அதைச் சுற்றி வளைத்துக்கொண்டு அப்படைகள் சென்றன. ஸாே-லா

107