பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வரும், பர்மாவின் பழைய நீதிபதி ஒருவரும், தாய்லாந்தின் மாஜிப் பிரதம மந்திரி ஒருவரும், பிலிப்பைன் தீவின் வக்கீல்கள் சங்கத் தலைவரும், இந்தியா, கானா, நார்வே நாடுகளின் வக்கீல்களும், மற்றும் பல அறிஞர்களும் உறுப்பினர்களா யிருந்தார்கள். உலகில் எங்காவது சட்டங்களுக்குப் புறம்பாக அநியாயமான படு கொலைகள் நடப்பதைக் கண்டு, நடுநிலை நின்று விசாரித்து, உண்மையை வெளியிட வேண்டுமென்பதே அக்குழுவின் குறிக்கோள். இந்தியாவுக்குள் புகுந்த அகதிகளான 20, 000 திபேத்தியர்களில் பலர் அக்குழுவின் முன்பு தாங்கள் நேரிலே கண்ட கோரங்களை எடுத்துரைத்தார்கள். அவர்கள் கூற்றுக்களை யெல்லாம் மேலும் பல இடங்களுக்குச் சென்று விசாரித்துப் பரிசீலனை செய்த பிறகே விசாரணைக் குழு அறிக்கை வெளியிட்டது. திபேத்திலுள்ள பெளத்த சமய மக்களை அழித்தொழித்து விடவே சீனர்கள் ஏற்பாடு செய்தார்கள் என்பதை அக்குழு உலகறியத் தெரிவித்து விட்டது.

இந்தியாவுக்கு வந்துள்ள தலாய் லாமா முதலில் முஸ்ஸூரியில் சிறிது காலம் தங்கியிருந்தார். பின்னர் தர்மசாலா என்ற இடத்தில் அவர் தங்குவதற்காக இந்திய அரசாங்கம் ஒரு பெரிய பங்களாவை அளித்துள்ளது. அங்கு வசித்து வரும் தலாய் லாமா தமது நாட்டில் தம் மக்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகளை யெல்லாம் அறிந்து உள்ளம் நொந்து போயிருக்கிறார். ஆயினும் உலகத்திற்கே அன்பு நெறி காட்டிய புத்தர் பெருமானிடம் அவருக்கு அசைவில்லாத நம்பிக்கையிருக்கிறது. நேற்று வந்த சீனக் கம்யூனிஸம் நிலைக்குமா, அல்லது 2,500 ஆண்டுகளாக நிலவி வரும் பெளத்த தர்மம் நிலைக்குமா என்பதில் அவருக்குச் சந்தேகமேயில்லே. உலகமெங்கும் வல்லரசுகளின் ஆர்ப்பாட்டங்களும், இராணுவ வலிமையே முதன்மை

இ. சீ. பா.—16

241