பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1962-63-இல் சீர்திருத்திய செலவுத் திட்டத்தின் படி வருமானம் சுமார் ரூ. 1,500கோடி. 1963-64-க்கு வருமானம் ரூ. 1,835 கோடி எதிர்பார்க்கப்பட்டது. முதலாவது திட்டக் காலத்தில் மொத்தம் செல விடப்பட்ட மூலதனம் ரூ. 3,360 கோடி; இதில் 46% பொதுத் துறையிலும், எஞ்சியது.தனியார்.துறை யிலும் முதலீடு செய்யப்பெற்றன. இரண்டாவது திட் டக் காலத்தில் ரூ. 6,750 கோடி. செலவிடப்பட்ட மூல தனம்; பொதுத் துறையில் 54%; எஞ்சியது தனியார் துறை. மூன்ருவது திட்டக் காலத்தில் ரூ. 10,400 கோடி முதலீட்டுக்கு உத்தேசிக்கப்பட்டது: இதில் பொதுத் துறையில் 61%; எஞ்சியது தனியார் துறை. நான்காவது திட்டத்தில் ரூ. 22, 600 கோடி முதலீட் டுக்கும் செலவுக்குமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெருந் தொழில்களுக்காக உள்ளது ரூ. 5, 600 கோடி, அதாவது மொத்தத்தில் சுமார் கால் பகுதி. இத் தொகை மூன்ருவது திட்டத்தில் ஒதுக்கப்பெற்றதற்கு இரு மடங்காகும். #. - பாரதத்தின் மறுமலர்ச்சி திட்டங்களின் மூலம் நாம் நெடுந்துாரம் முன்னேறி வந்துள்ளோம். ஆனல் நாம் இன்னும் செல்லவேண்டிய பாதை மிகமிக நீளமானது. 25 ஆண்டுகளில் ஐந்து திட்டங்களையும் நிறைவேற்றிய பிறகே மக்கள் அவற் றின் பயன்களை முழுதும் தெரிந்துகொள்ள இயலும். ஆயினும், அசோகர் காலத்திலிருந்து இன்றுவரை எக்காலத்திலு மில்லாத வளர்ச்சியை நாடு அடைந் துள்ளது என்பது குருடர்களுக்குக்கூடத் தெரியக் கூடிய விஷயம். நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி இந்த அதி காரத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளதிலிருந்து நாட் டுப் பாதுகாப்புக்குரிய நம் வலிமை தெளிவாகும். JJ 4