பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கட்சியும் வளர்ந்து வரவே, டாக்டர் ஸென்னுடைய கோமிண்டாங் கட்சி அத்துடன் ஒத்துழைத்துவந்தது. 1924-ஆம் வருடத் தொடக்கத்தில் கோமிண்டாங்கின் முதல் வருடாந்தரக் காங்கிரஸ் கான்டனில் நடைபெற்றது. அதில் தேசத் தந்தையின் மும்மைத் தத்துவங்கள் ஏற்றுக் கொள்ளப்பெற்றன. அவ்வருட இறுதியில், தேசத்தின் வடபகுதியில் போர் வெறியர்களாயிருந்த பிரபுக்களைக் கண்டு பேசி, தம் கொள்கைகளின்படி சுதந்தரத்தையும், குடியரசையும் நிலைநிறுத்த ஸென் அப்பகுதிக்குச் செல்வதாயிருந்தது. ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவ்விருப்பம் நிறைவேறவில்லை. மறுவருடம் மார்ச் மாதம் 12-ந்தேதி, ‘சீனா, புரட்சி, சுதந்தரம், அமைதி ! என்றே துடித்துக் கொண்டிருந்த அவருடைய இதயத் துடிப்பு நின்றுவிட்டது. அவர் வகுத்த வழியிலே கோமிண்டாங் சரியாகவோ, தவறாகவோ. தீவிரமாக வேலை செய்து வந்தது.

சியாங் கை-ஷேக்

1926-இல் கோமிண்டாங் சேனையின் சேனாபதி யாகச் சியாங் கை-ஷேக் வட சீனப்பிரபுக்களே எதிர்த்து அடக்கிவரச் சென்று, பல வெற்றிகளைப் பெற்றார். அடுத்த வருடம் தொழிற் பெருக்கமுள்ள ஷாங்கை நகரமும், பழைய தலைநகரான நான்கிங்கும் அவர் வசமாயின. இடையில் கோமிண்டாங் கட்சிக்கும் கம்யூனிஸ்டுகளுக்குமிடையே வேற்றுமைகள் வளர்ந்து கொண்டே வந்தன. நான்கிங்கில் புதிதாக அமைக்கப் பெற்ற தேசிய அரசாங்கம் 1928-இல் சியாங்கைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

சியாங் கை-ஷேக் டாக்டர்ஸென்னுடன் நெருங்கிப் பழகியவர்; ரஷ்யாவுக்குச் சென்று ராணுவப் பயிற்சி

128