பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



‘திபேத்து முழுவதிலுமுள்ள எல்லாமக்களும் ஒற்றுமையாகவும், ஒத்துழைத்தும் நம் வல்லமையைப் பெருக்குவீர்க ளென்றும், அரசியலும் சமயமும் இணைந்த அடிப்படைமீது புதியதொரு திபேத்தை நிறுவுவதற்கு உங்கள் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்துவீர்களென்றும் நான் நம்புகிறேன்.’

1956, ஏப்ரல் மாதம் திபேத்திய அரசியல் கமிட்டியை ஆரம்பித்து வைப்பதற்குச் சீனாவிலிருந்து உதவிப் பிரதமர் மார்ஷல் சென் யி வந்திருந்தார். கமிட்டி கூடி, அரசியல் இலாகாக்களும் அமைக்கப்பட்டன. இந்த ஏற்பாடுகளைக் கண்ட ஜனங்கள் மேலும் மேலும் சீனரை வெறுக்கலாயினர். தங்கள் சுதந்தரத்தை அடியுடன் பறிப்பதற்கு இவையெல்லாம் மறைமுகமான வழிகள் என்பதையும் அவர்கள் கண்டுகொண்டனர். திபேத்தின் கிழக்குப் பகுதியான சாம்டோவில் மக்கள் கலகம் செய்ய ஆயத்தமாயிருந்தனர். மற்ற எல்லைப்புற மாகாணங்களிலும் முக்கியமான திபேத்தியத் தலைவர்கள், மலைப்பிரதேசங்களுக்கு ஒடி ஒளிந்து கொண்டு, சீனர்களோடு சண்டைசெய்யக் கொரில்லாப் படைகளுக்கு ஆட்கள் சேர்த்துவந்தனர். அந்த நிலையில் தலாய் லாமா, தாம் நாட்டில் தங்காமல் மீண்டும் சிறிது காலம் எங்காவது ஒதுங்கியிருந்தால் நலமென்று கருதினர். போதிய ஆயுதங்களும் பயிற்சியுமில்லாத திபேத்தியர் சீனப்படையினரை எதிர்த்துக் கலகம் செய்தால், ஆயிரக்கணக்கில் மக்கள் மடிவதுடன், நாடும் நாசமாகுமே என்று அவர் கலங்கினார்.

அச்சமயத்தில் அவர் இந்தியாவுக்கு ஒரு முறை விஜயம் செய்ய வேண்டுமென்று இந்திய மகா போதி சங்கத்தார் அழைப்பனுப்பியிருந்தனர். அந்த அழைப்பு சிக்கிம் இராஜ்யத்து இளவரசர் மூலம் தலாய் லாமா வுக்குக் கிடைத்தது. 1956 மே, 24-ந் தேதி இந்தியா

229