பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தாங்கள் போய்ப் படைப்பயிற்சியும், தொழிற்பயிற்சியும் அளித்தது பற்றிப் பின்னால் வருந்துவதாகவே தெரிகின்றது.

மாஸ்கோவும் பீகிங்கும்

1949 முதல் ரஷ்யாவும் சீனாவும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பல உடன்படிக்கைகள் செய்துகொண்டிருக்கின்றன. நெருக்கடியான நிலைமைகளில் இரண்டும் துணிவுடன் சேர்ந்து வேலைகள் செய்து வந்தன. ஆயினும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மாஸ்கோவின் உத்தரவுகளுக்குப் பணிந்து நடப்பதுபோல், பீகிங் பணிவதில்லை என்பது வெளிப்படை. மாஸ்கோவும் பீகிங்கிடம் அதிகாரத்தைக் காட்டாமல் நடந்து வந்திருக்கலாம். இதுவரை இருந்துவந்த ஒற்றுமையில் இப்பொழுது பிளவு ஏற்பட்டிருக்கின்றது. சீனாவிலிருந்த ரஷ்ய நிபுணர்கள் வெளியேறிவிட்டார்கள். மற்ற உறவுகளும் குறைந்து கொண்டே வருகின்றன. இனி பீகிங் இங்கிலாந்து முதலிய மேலை நாடுகளின் உதவியை அதிகமாக நாடவேண்டியிருக்கும். ஆசியாவிலும், வெளியிடங்களிலும் பீகிங் தான்தோன்றியாக நடந்து கொள்வதில் மாஸ்கோவுக்குச் சங்கடம் ஏற்படுகின்றது. அமெரிக்காவுடன் போராடக்கூடிய நிலைமையை உண்டாக்காமல் பீகிங் தன் காரியங்களைச் செய்து கொண்டிருந்தால், மாஸ்கோ தலையிடவேண்டிய அவசியம் இராது. அமெரிக்காவுடன் போர் ஏற்படுமாயின், அப்பொழுது மாஸ்கோவுக்குத்தான் பொறுப்பு அதிகம்.

அத்தகைய நிலைமையைச் சீனா உண்டாக்குமா ? அல்லது பெரும் போரில்லாமல், தீவிர அரசியல் பொருளாதார முறைகளின் மூலமும், மிரட்டல்கள் மூலமும் தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுமா ?

201