பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முடியுமோ அவ்வளவையும் பிடிக்க முனைந்து நிற்கிறார்கள் இதற்கும் கம்யூனிஸத்திற்கும் சம்பந்தமேயில்லை. இது ஏகாதிபத்திய வெறி. இந்த வெறியால் கம்யூனிஸத்திற்கு ஆசியாவிலும் உலகிலும் கெட்டபெயர்தான் பரவும். ஏகாதிபத்தியத்தை எதிர்க்கக் கிளம்பியவர்களே ஏகாதிபத்தியவாதிகளாக மாறிவிட்டால், பிறகு கம்யூனிஸம் எப்படிப் பிழைத்திருக்கும் !

‘துப்பாக்கிக் குழாயிலிருந்து தான் அரசியல் வலிமை தோன்றுகின்றது...... துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் எதுவும் தோன்ற முடியும்’ என்பது மாஸே-துங்கின் வாக்கு. கம்யூனிஸ்ட் புரட்சிக் கூட்டத்தார் பலாத்காரத்தின் மூலம் சமூகத்தை மாற்றியமைக்க முடியும் என்று நம்புவது வழக்கம்தான். ஆயினும் சீனக் கம்யூனிஸ்டுகளைப் போல் பலாத்காரத்தையே-துப்பாக்கிக் குழாயையே - கும்பிட்டு வணங்குவோர் இல்லை. பலாத்காரம் ஒரு வழியேயன்றி அதுவே குறிக்கோள் அன்று. உள்நாட்டில் பஞ்சத்திலும், பட்டினியிலும் கிடந்துழன்ற மக்களிடையே கம்யூனிஸ்ட் கொள்கையையும், துப்பாக்கியையும் பயன்படுத்திச் சீனத்தலைவர்கள் வெற்றி பெற்றது போலவே, உலக ஆதிக்கியத்திலும் வெற்றி பெற முயலுகின்றனர். இதனால் ஆசிய ஆப்பிரிக நாடுகள் பலவும் சீனாவின் உண்மை உருவைக் கண்டுகொண்டு, நாளடைவில் அதற்கு எதிராகவே சேரவேண்டியிருக்கும். நாடு பிடிக்கும் காலமும், ஏகாதிபத்தியக் காலமும் மலையேறிவிட்டன. பெரிய வல்லரசுகள் தாங்கள் நெடுங்காலம் ஆண்டுவந்த சிறு நாடுகளைக்கூட அடக்கி வைத்துக்கொள்ள முடியாமல் கைவிட்டு ஒடுகின்ற இன்றைய நிலையில், சீனா இந்த வேட்டையில் இறங்கியிருப்பது அது அழிவுப் பாதையில் திரும்பியுள்ளதையே காட்டுகின்றது.

181