பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 1950-லிருந்து 1958 வரை புதிய ரயில் பாதைகள் 10, 230 மைல் நீளத்திற்குப் போடப்பட்டிருக்கின்றன. 1958-ல் சீனாவில் மொத்தம் 19,028 மைல் நீளத்திற்கு ரயில் பாதைகள் இருந்தன. அவ்வருடத்தில் 2, 44,000 மைல் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்கு ஏற்றவையாயிருந்தன. இவை 1949-லிருந்ததற்கு ஐந்து மடங்கு அதிகமானவை.

ஸோவியத் ரஷ்யாவின் உதவியுடன் டிரக்குகள், ரயில் வண்டிகள், டிராக்டர்கள், விமானங்கள் முதலியவை சீனாவிலே தயாரிக்கப்பெறுகின்றன. இராணுவத்திற்குத் தேவையான தளவாட உற்பத்தியும் படிப்படியாக முன்னேறி வருகின்றது.

1949-ல் 80 லட்சம் தொழிலாளர்கள், ஆலைச் சிப்பந்திகள் இருந்தனர். 1957 இறுதியில் மூன்று மடங்குக்கு மேலாக, 2,45, 10, 000 பேர்களாகப் பெருகிவிட்டனர். 1958-ல் தொழில் வளர்ச்சிக்காகப் ‘பாய்ச்சல்’ முறையில் விசேடஏற்பாடுகள் செய்ததில், 4, 53, 20,000 உழைப்பாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டனர். முற்காலத்திய வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்துவிட்டது என்று சொல்லப்படுகின்றது. தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் திறமையும், கடமை யுணர்ச்சியுமுள்ள ‘மாதிரி’த் தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கின்றன. அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வேகமும் உற்சாகமும் பெற இம்முறை வாய்ப்பாகும். மேலும் தொழிற் சாலைகளிலும், சுரங்கங்களிலும் மேலும் மேலும் செலவைக் குறைத்து, அதிக வேலை நடைபெறச் செய்வதற்கும், குறைகளைக் களைவதற்கும் ஆங்காங்குள்ள தொழிற்சங்கங்கள் கூறும் ஆலோசனைகளை அரசாங்கம் உடனுக்குடன் கவனித்துப் பயன்படுத்துகின்றது.

154