பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்து பெரும் படைகளை அனுப்பித் தன் நோக் கத்தை நிறைவேற்றிவிடலாம் என்பது பாகிஸ்தா னின் கருத்து. 1965, ஆகஸ்டு 5-ந் தேதியிலிருந்து அவர்கள் காஷ்மீருக்குள் நுழைந்து வந்தனர். ஆனல் பெரும்பாலும் முஸ்லிம்களாயிருத்த காஷ் மீர் மக்கள் அந்த ஊடுருவிகளுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். அதற்கு மாருக அவர்கள் ஊடுரு விக் கூட்டங்களை இந்திய இராணுவத்திடமும், போலீ ஸாரிடமும் காட்டிக் கொடுத்தார்கள். ஊடுருவிகள் பல கிராமங்களுக்குத் தீவைத்தும், மக்களை அழித்தும் .ெ காலை பா த க ங் க ள் செய்து வந்தார்கள். இந்திய ராணுவ வீரர்கள் மிக வேகமாக அவர்களை எதிர்த்து அழித்தும், சிறைப்பிடித்தும் இடைவிடாமல் போராடி ஞர்கள். அவர்களில் பலர் இறந்தனர். ஏராளமான ஆயுதங்களும், வெடிமருந்தும், ரேடியோ செட்டு களும், உணவுப்பொருள்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. எஞ்சியிருந்த ஊடுருவிகள் காடு களிலும் மலைகளிலும் மறைந்திருந்து திடீர் திடீரென்று வந்து அழிவு வேலைகள் செய்துவந்தனர். எனினும் பாகிஸ்தானின் முதல் நோக்கத்தில் மண் விழுந்தது. பிறகு 1965, செப்டம்பர் மாதம் முதல் தேதி யன்று பாகிஸ்தான் 70 டாங்குகளுடனும், பெரும் படையுடனும் காஷ்மீரைச் சேர்ந்த சாம்ப்-ஜாரியன் பகுதியில் படையெடுத்துவந்தது. மாபெரும் உப கண்டமாகிய இந்தியா மீது சுண்டைக்காய் ராஜ்ய மான பாகிஸ்தான் போர் தொடுக்க எப்படித் துணிந் தது ? பாகிஸ்தானின் வலிமை இந்தியாவுடன் போராடுவதற்கென்றே பாகிஸ் தான் படை அமைக்கப்பெற்றுள்ளது. நிபுணர்களின் 3 47