பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழுது பார்த்தலும் உடனுக்குடன் நடைபெறு கின்றது. நிலக்கரி எடுப்பதுடன், அனல் மின் சக்தி உற்பத்தி செய்தல் போன்ற வேறு சில திட்டங்களுக்கும் சேர்த்து நெய்வேலியில் இதுவரை சுமார் ரூ. 100 கோடி செலவாகி யிருக்கும். ரஷ்ய உதவியுடன் அமைக்கப் பெற்றுள்ள மாபெரும் அனல் மின் நிலையம் 1962 ஆகஸ்டு முதல் நன்கு வேலை செய்து வருகின்றது. இதில் உற்பத்தியாகும் மின்சார சக்தியைப் போல் இன்னும் இரு மடங்காவது பெருகும்படி கூடுதல் ஏற் பாடுகள் நடைபெறுகின்றன. நெய்வேலியில் மொத்தம் 16,000 தொழிலாளர் கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்காக 12,000 வீடுகள் கொண்ட ஒரு நகரமே அமைக்கப்பெற்றுள் Tெது. இரசாயன உரங்கள் : உணவுப் பொருள்களின் உற் பத்தி பெருகுவதற்கு உரங்கள் மிகுதியாகக் கிடைக்க வேண்டும். நம் நாட்டில் இயற்கையான உரங்களும் குறைவு, செயற்கையான இரசாயன உரங்களின் உற் பத்தியும் எதிர்பார்த்த அளவுக்கில்லை. போதிய உரங்களில்லாவிட்டால், விவசாயத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது. இரசாயன உரங்களை நாம் போதிய அளவு உற் பத்தி செய்ய முடியாமலும், வெளி நாணயச் செல வாணியின் நெருக்கடியால் அவைகளை வெளியிலிருந்து இறக்குமதி செய்ய முடியாமலும் இருக்கின்றது. 1961-62-இல் நாட்டுக்கு இரசாயன உரங்களின் தேவை சுமார் 5: லட்சம் டன் என்றும், 1962-63-இல் சுமார் 6 லட்சம் டன் என்றும், தேவையில் 60 சத விகிதமே கிடைக்கு மென்றும் அரசாங்கம் கணக்கிட் டிருந்தது. 1965-66-க்குள் நைட்டிரஜன் இரசாயன 29 I