பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10, 000 சதுர மைல் அளவிலுள்ள நிலங்கள் பாழாகி விட்டன. இனி அந்தப் பிரதேசத்திற்கு வெள்ளத்தில்ை பயமில்லை. முதற் படியாக 14 லட்சம் ஏக்கருக்கும், இரண்டாம் படியாக 30 லட்சம் ஏக்கருக்கும் தண்ணீர் விட உத்தேசிக்கப் பட்டுள்ளது. 15, 000 கிலோ வாட்டுகள் மின்சார உற்பத்திக்கும் ஏற்பாடாகி யிருக்கிறது. நாகார்ஜுன சாகர் திட்டம் : ஆந்திர ந ா ட் டி ல் கிருஷ்ணு, கோதாவரி நதிகளுக்கிடையில் மணல் மூடிப் போன விஜயபுரி என்னும் இடமுள்ளது. முற்காலத்தில் அங்கே சதவாகன வமிசத்து அரசர்கள் ஆண்டு வந்த னர். அங்கேதான் புகழ்பெற்ற பெளத்த ஆசாரியர் நாகார்ஜுனர் இருந்தார். பெளத்த தர்மத்தில் தேர்ந்த பேராசிரியர் பலரும் அங்கிருந்து பிரசாரம் செய்தும், கல்வி புகட்டியும் வந்ததால், இலங்கை, காந்தாரம், காஷ்மீர், சீன முதலிய இடங்களிலிருந்தும் பலர் அங்கு வந்து கூடியிருந்தனர். அந்த இடத்தின் பழைய கட்ட டங்கள், மாளிகைகள், கலைக்கூடங்கள் ஆகியவற்றை யெல்லாம் கிருஷ்ணு நதியின் மணல் மூடிவிட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தோண்டிப் பார்த்த பொழுதுதான், விஜயபுரியின் பழம் பெருமைகள் புலனயின. o இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அதே இடத்தில் அணைகட்ட வேண்டுமென்று தீர்மானிக்கப் பெற்றது. இந்த அணையின் உத்தேசச் செலவு முதற் படியில் ரூ. 37 கோடி, இரண்டாம் படியில் ரூ. 137 கோடி. அணையின் நீளம் சுமார் 3 மைல். இதில் அாரைக்கட்டுப் பகுதி மட்டும் 3, 90 0 அடி. அணையின் உயரம் முதலில் 330 அடியும், பின்னர் 380 அடியும் இருக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அணையின் வேலைகள் முழுதும் முடிந்தபின், சுமார் 50 லட்சம் 9 06