பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் வெற்றிகளுக்கு உதவியாயிருந்தன. அதன் தாக்குதலைக் கண்டு பிரெஞ்சுத் துருப்புகள் பல இடங்களில் செயலற்றுப் போயின. 1905-ஆம் ஆண்டில் 4; கோடி ஜனத்தொகை கொண்ட ஜப்பான், 14 கோடிக்குமேல் மக்களைக் கொண்டிருந்த ரஷ்யாவை முறியடித்த வரலாறும் ஆராய்ந்து பார்க்கத் தக்கதாகும். போரிலே அரசாங்கத்தின் கவனம் முழுதும் வெற்றி காண்பதிலேயே இருக்கவேண்டும்; நாட்டு மக்கள் அனைவரும் தாங்களே அரசாங்கம், அரசாங் கமே தாங்கள் என்று எண்ணிப் பொறுப்புடன் நடக்க வேண்டும். முதல் உலகப் போர் தொடங்கு முன்னல் ஜெர்மன் சக்கரவர்த்தியான இரண்டாவது கெய்லர் தமது நாட்டிலிருந்த 'ஸோஷியல் டெமாக்கிரட் கட்சி யைச் சேர்ந்தவர்களைப் பற்றி, அவர்களுக்குத் தாய் நாடு என்பதே கிடையாது. அந்த அற்பர்கள் ஜெர் மானியர் என்று கூட அழைக்கப்பட அருகதையற்றவர் கள் என்று கூறினர். ' எனக்கு எந்தக் கட்சியைப் பற்றியும் தெரியாது; ஜெர்மானிய மக்களை மட்டுமே நான் அறிவேன் ' என்றும் அவர் முழங்கினர். சக்கர வர்த் தியே இப்படிப் பேசியதால், நாட்டில் தேசிய உணர்ச்சி வெள்ளமிட்டுப் பெருகிற்று என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பாரதத்தின் படை வலிமை இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை நடந்த காலத்தில் (1947), இந்திய அரசாங்கத்திடம் இருந்த படைகளும் இரு கூருகப் பிரிக்கப்பட்டன. தரைப்படைகளில் இந்தி யாவுக்கு 15-ம், பாகிஸ்தானுக்கு 8-ம், கவசம் பூண்ட வாகனப் படைகளில் இந்தியாவுக்கு 12-ம் பாகிஸ்தா னுக்கு 6-ம், பீரங்கிப்படைகளில் முறையே 19-ம், 9-ம், § 74