பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதிரியாரின் ஆன்மா

47



"பிரபுவே ! நான் இறக்கவேண்டியதுதான் என்றால், நான் எவ்வளவு சீக்கிரத்தில் சுவர்க்கம் போய்ச் சேருவேன் என்பதைச் சொல்லுங்கள் !” |

"அங்கே உமக்கு இடம் கிடையாது. நீரோ சுவர்க்கமே இல்லை என்று கூறிவந்தவரல்லவா?”


"பாப விமோசன ஸ்தானத்திற்காவது நான் போக முடியுமா?


"அப்படி ஒன்று இல்லையென்று நீர் சொல்ல வில்லையா? நீர் நேராக நரகத்திற்குத்தான் போவீர் !"

"ஆனால், பிரபுவே, நான் நரகமும் இல்லையென்று தானே சொல்லி வந்தேன் ! அங்கு மட்டும் என்னை எப்படி அனுப்ப முடியும்?"

தேவதுாதருக்குத் திகைப்பு உண்டாகிவிட்டது. அவர் கூறியதாவது : “சரி, உமக்காக நான் செய்யக்கூடியது இதுதான். நீர் உலகில் நூறு ஆண்டுகள் வாழ்ந்து, எல்லா இன்பங்களையும் நுகர்ந்து வரலாம். ஆனால், அதற்குப்பின் நீர் நிரந்தரமாக, யுகக் கணக்காக நரகத்திலேயே கிடக்கவேண்டும். அல்லது மிகவும் அவதிப்பட்டு இருபத்து நான்கு மணி நேரத்தில் நீர் மரணமடைந்து, இறைவனின் இறுதித் தீர்ப்பு நாள்வரை பாப விமோசன ஸ்தானத்தில் இருக்க வேண்டும்; ஆனால், இப்படி நடப்பதற்கு ஒரு நிபந்தனையுண்டு; உமக்காகப் பரிந்து பேசக்கூடிய - ஆண்டவனை நம்பும் ஒர் ஆஸ்திகனை நீர் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு வழிகளே இருக்கின்றன. உமக்கு எது தேவை?”

பாதிரியார் யோசித்து முடிவு சொல்ல ஐந்து நிமிடங்கள்கூட ஆகவில்லை. "நான் இருபத்து நான்கு மணி நேரத்தில் இறந்துவிடத் தயார் என் ஆன்மா அதனால் ஈடேற்றமடையும் !" என்று அவர் சொன்னார். மேற்கொண்டு அவர் செய்ய வேண்டிய முறைகளைப்பற்றி விவரம் சொல்லிவிட்டுத் தேவதூதர் மறைந்து போனார்.

உடனே பாதிரியார், மாணவர்களும் அரச குமாரர்களும் அமர்ந்திருந்த அறைக்குள்ளே சென்று, எல்லோரையும் அழைத்துப் பேசத் தொடங்கினார் :