பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதிரியாரின் ஆன்மா

45


 யில் சேர்த்தார்கள். அவனுடைய செலவுக்காக அவர்கள் தங்கள் வாயையும் வயிற்றையும் கட்டிக்கொண்டு மிகுந்த சிரமப்பட்டார்கள். அவனைப் போன்ற கல்விமான் அயர்லாந்திலேயே இல்லை என்னும் அளவுக்கு அவன் பெயர் வாங்கினான். அப்பொழுதும் விவாதத்தில் அவன் சளைப்பதில்ல, அவனை வெல்வோருமில்லை. பெரிய பிஷப்புகள்கூட அவனிடம் பேசினால், உடனே அவன் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று எடுத்துக் காட்டி விடுவான். கல்வி முடிந்து அவனும் பாதிரிப்பட்டம் பெற்றான்.

அக்காலத்திலே பள்ளிகளில் ஆசிரியர்கள் என்று தனியாக நியமிப்பதில்லை, பாதிரிமார்களே கல்விச் சாலைகளை நடத்தி வந்தனர். எனவே, நமது ஏழைப் பாதிரியாரிடமும் பல மாணவர்கள் படிக்க வந்தார்கள். அவரே நாட்டில் தலைசிறந்த அறிவாளியென்று புகழ் பெற்றிருந்ததால், வெளிநாடுகளிலிருந்த அரசர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை அவரிடமே அனுப்பி வைத்தார்கள். பள்ளிக்கூடம் கொள்ளும் அளவுக்குப் பிள்ளைகள் சேர்ந்து பயின்று வந்தனர். இதனால் அவருக்குச் செருக்கு அதிகமாகிவிட்டது. அவர் எவ்வளவு தாழ்ந்த நிலையிலிருந்தார் என்பதையே அவர் மறக்கத் தொடங்கினார். எல்லாவற்றிற்கும் மேலாக எந்தக் கடவுள் அவரை இவ்வளவு உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்தாரோ அந்தக் கடவுளையே மறக்கத் துணிந்துவிட்டார். விவாதத்திலே அவருக்கு இருந்த ஆர்வத்தினால், அவர் ஒவ்வொன்றாக மறுத்துவரத் தொடங்கி, கடைசியில் சுவர்க்கமும் கிடையாது. நரகமும் கிடையாது என்றும், பாப விமோசன ஸ்தானம் ஒன்றுமில்லையென்றும், கடவுளே இல்லை யென்றும், மனிதர்களுக்கு ஆன்மாக்கள் கிடையாதென்றும். அவர்கள் நாய் நரிகளைப் போன்றவர்களேயன்றி எதிலும் மேலானவர்களல்லரென்றும், அவர்கள் மரித்தால் அத்துடன் எல்லாம் முடிந்தது, மரணத்திற்குப்பின் எதுவுமில்லையென்றும் விவாதிக்க முன்வந்துவிட்டார் "ஆன்மாவைக் கண்டவன். எவன்? என்னிடம் காட்டினால் நம்புவேன்” என்று அவர் கூறுவார். இதற்கு யார் என்ன பதில் சொல்லமுடியும் நாளடைவில் அவருடைய சீடர்கள் எல்லோரும் வேறு உலகமே கிடையாது, இந்த உலகில் யார் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற