பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு மல்லர்கள்

39



பயில்வானாயிற்றே - மக்கெளலையே எதிர்க்கத் துணிந்து வந்தவராயிற்றே - என்று அந்தக் கடினமான ரொட்டியை உங்களுக்கும் படைத்தேன். அந்த ரொட்டிகள் கிடக்கட்டும், இதைத் தின்று பாருங்கள். இது ஒருவேளை சற்று மென்மையாயிருக்கும் !" என்று அவள் வேறொரு ரொட்டியை எடுத்து வந்து படைத்தாள்.

அசுரனுக்குப் பசி அதிகம். எதையாவது கொஞ்சம் புசிக்க வேண்டுமேயென்று அதை வாயிலிட்டுக் கடித்தான். உடனே முன்னைவிட இரண்டு மடங்கு உரத்த குரலில் 'ஒ'ஒ' என்று ஒலமிடத் தொடங்கினான். "இடிதான் விழவேண்டும் உன் ரொட்டிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போ ! இவைகளைத் தின்றால், இனி என் வாயில் ஒரு பல்கூட மிஞ்சியிராது, அடுத்த இரண்டு பற்களும் உடைந்துவிட்டனவே " என்று அவன் கூவினான்.

"பெரியவரே ! உங்களால் ரொட்டியைத் தின்ன முடிய வில்லை என்றால், அதை மெதுவாய்ச் சொன்னாலென்ன? தொட்டிற்பிள்ளையை எழுப்பிவிடுவீர்கள் போலிருக் கிறதே அதோ விழித்துவிட்டானே !" என்று கவலைப் படுவது போல் பேசினாள், ஊனாக்.

மக்கெளல், துங்கி விழிப்பது போல் பாவனை செய்து கொண்டு, தொட்டிலிலிருந்தபடியே குரல் கொடுத்து முனகினான். அது குகுல்லினுக்குக் குழந்தைக் குரலாகத் தோன்றவில்லை, குட்டி யானை பிளிறுவது போலிருந்தது. "அம்மா, பசிக்கிறது! ஏதாவது கொடு” என்று மக்கெளல் கேட்டான். உடனே ஊனாக் ஒடிச்சென்று, தோசைக்கல் வைக்காத பெரிய ரொட்டி ஒன்றை எடுத்து வந்து, அவன் கையிலே கொடுத்தாள். அங்கே நடப்பவைகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்ததில் அவனுக்குப் பசி அதிகமா யிருந்தது. அதனால் கையிலிருந்த ரொட்டியை விரைவிலே கடித்துத் தின்றுவிட்டான், இதைக் கண்ட குகுல்லின் பிரமிப்படைந்தான். தன் பற்களுள் நான்கைப் பதம் பார்த்த ரொட்டியை மக்கெளவின் குழந்தை ஒரு நொடியில் காலி செய்துவிட்டதேயென்று அவன் வியப்புற்று, மல்லன் மக்கெளலைத் தான் சந்திக்காமற்போனதே நல்லதென்று எண்ணினான். இந்த மாதிரி ரொட்டியைத் தின்னும் மனிதனையே. நான் இதுவரை பார்த்ததில்லை; இங்கே தொட்டிலிலே கிடக்கும் குழந்தை என் கண்னெதிரிலேயே