பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இறுமாப்புள்ள இளவரசி


அவள் அறிந்ததும், அவள் தன் கணக்குப்பிள்ளையை அழைத்தாள்.

"கணக்குப்பிள்ளை ! நம்முடைய இரும்புப் பெட்டியில் பொற்காசுகள் எவ்வளவு இருக்கின்றன?

"நூறாயிரம்”

“நகைகள்?


“அவைகளும் நூறாயிரம் பொற்காசுகள் பெறும்."


“மாளிகைகள், நிலங்கள், காடுகள் - எல்லாம் எவ் வளவு பெறும்?"


"நான்கு இலட்சம் பொற்காசுகள்."


“சரிதான், தங்கமாயில்லாதவைகளையெல்லாம் உடனே விற்றுத் தங்கம் வாங்கிவிடுங்கள். வாங்கிய பின் கணக்கை என்னிடம் கொண்டுவந்து காட்டுங்கள். இந்த மாளிகையையும் இதைச் சுற்றியிருக்கும் நிலத்தையும் மட்டும் விற்காமல் வைத்துக்கொள்வோம்!”

இரண்டு நாள்களிலே அவளுடைய கட்டளை நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பொற்காககள் குவிந்து விட்டன. அந்தப் புனிதவதி, ஏழை மக்களை அழைத்து, அவர்களுடைய தேவைகளை அறிந்து, அவற்றிற்குத் தக்கபடி பொருள் கொடுத்து உதவினாள். இதனால் நகரில் ஆன்மாக்களை விற்பதற்கு ஆள்கள் போகவில்லை. சயித்தான் தன் காரியம் தடைப்படுவதைக் கண்டு, உண்மையை ஆராய்ந்து தெரிந்துகொண்டான். சீமாட்டியின் செல்வமே தனக்கு இடையூறாயிருந்ததால், அதைக் கவர்வதற்கு அவன் ஏற்பாடு செய்தான். அவளுடைய மாளிகையிலே வேலை பார்த்து வந்த ஒரு துரோகியின் உதவியால், சீமாட்டி காதலினின் பொருள் அனைத்தும் திருடர்களால் கொள்ளையிடப்பட்டது. அவள் எவ்வளவு தடுத்துப் பார்த்தும் பயனில்லாது போய்விட்டது. அவள் தன் கைகள் இரண்டையும் சிலுவை★போல் சேர்த்து வைத்துக்கொள்ள வாய்ப்புக் கிடைத்திருந்தால், திருடர்கள்

————————————————————————————————————————————

★கடவுளின் திருநாமத்தைக் கேட்டாலும், சிலுவை முதலிய புனிதமான சின்னங்களைக் கண்டாலும், சயித்தானும், அவனுடைய கூட்டத்தாரும் ஒடிவிடுவார்கள்.