பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இறுமாப்புள்ள இளவரசி




கொள்கைக்கு வந்துவிட்டனர். பாதிரியாரே அவர்களுக்கு வழிகாட்டி வழிகாட்டவும் அவர் அஞ்சவில்லை. எவ்வாறெனில், நல்ல அழகான ஒரு பெண்ணைப் பார்த்து அவர் திருமணம் செய்துகொண்டார். விவாகத்தை நடத்திவைக்க நாட்டிலே ஒரு பாதிரியார்கூட முன்வர வில்லை. எனவே, அவரே வேத வாக்கியங்களைச் சொல்லி மனத்தை முடித்துக்கொண்டார். எங்கும் இதைப்பற்றி அபவாதம் ஏற்பட்டது. ஆனால், யாரும் வெளிப்படையாகப் பேசவோ, கண்டிக்கவோ முன்வரவில்லை. ஏனெனில், பாதிரியாரிடம் அரச குமாரர் பலர் படித்து வந்தார்கள் அல்லவா? அவர்கள் அவர் பக்கம் சேர்ந்துகொண்டிருந்தார்கள். எதிர்ப்பவர்களை அவர்களே அடித்து விடுவார்கள். ஒன்றுமறியாத பிள்ளைகளான அவர்கள் அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் உண்மை யென்று நம்பி வந்தார்கள். இவ்வாறு அவர் கருத்துகள் எங்கும் பரவி வந்தன. உலகமே சீர் கெட்டுவிடுமோ என்றாகிவிட்டது.


அந்த நிலையில், ஒர் இரவில் தேவதுதர் ஒருவர் வந்து, பாதிரியாரிடம், பூவுலகில் அவர் வாழ்வு மேலும் இருபத்து நான்கு மணி நேரந்தான் என்று அறிவித்தார். உடனே பாதிரியாரின் உடலெல்லாம் நடுங்கத்தொடங்கிற்று. கூடுதலாகச் சிறிது காலம் உலகிலே தங்கியிருக்க அவர் அனுமதி கேட்டார்.

ஆனால், தேவதூதர் இடம் கொடுக்கவில்லை. "பாவியாகிய உமக்கு மேற்கொண்டு நேரம் எதற்கு” என்று அவர் கேட்டார்.

"ஐயா, ஏழையாகிய என் ஆன்மாவுக்கு இரங்குங்கள் என்று பாதிரியார் மன்றாடினார்.

'முடியாது ! ஆனால், உமக்கு ஒர் ஆன்மா இருக்கிறதா? அதை எப்படிக் கண்டுபிடித்தீர்?"

"நீங்கள் வந்ததிலிருந்து அது என்னுள்ளே சிறகடித்துக் கொண்டிருக்கின்றது. அதைப்பற்றி நான் முன்பே சிந்திக்காமலிருந்துவிட்டேனே ! என்னைப் போன்ற அறிவிலி வேறு எவரேனும் உண்டோ?”

"ஆம், அறிவிலிதான் ! நீர் கற்ற கல்வியெல்லாம் உமக்கு ஒர் ஆன்மா இருக்கிறது என்பதைக்கூட அறிவுறுத்தா விட்டால், அதனால் என்ன பயன்?”