பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6. காத்தான் சுமந்த பினம்

யர்லாந்து நாட்டிலே, லெய்த்திரிம் தாலுகாவில், ஒரு கிராமத்தில் செல்வம் மிகுந்த குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுடைய மகன் காத்தான் என்பவன் இளைஞன் உறுதியான உடல் படைத்தவன்; எப்பொழுதும் உற்சாகமாயிருக்க விரும்புபவன். அவன் கேட்ட பொழுதெல்லாம் தந்தை பணம் கொடுத்து வந்தான். அவனுக்கு வயது ஆக ஆக, அவன் வேலை செய்வதில் பிரியமில்லாமல், வேடிக்கையாகச் சுற்றித் திரிவதிலேயே காலம் கழித்து வந்தான். தந்தைக்கு அவன் ஒரே மகனாயிருந்ததால், அவன் பிரியம் போல் நடப்பதைத் தடுப்பார் எவருமிலர். பொற்காசுகளை அவன் தண்ணிர் போல் அள்ளிச் செலவிட்டு வந்தான். வீட்டிலே அவனைக் காண்பது அரிது; சுற்றிப் பத்து மைல் எல்லைக்குள் ஏதாவது சந்தை, பந்தய ஆட்டம், பொதுக்கூட்டம் முதலிய எது நடந்தாலும் அவனை அங்கே நிச்சயமாய்க் காணலாம். இரவு நேரங்களில் அவன் வீதிகளிலே சுற்றிக்கொண் டிருப்பான். பெண்களைக் கண்டுவிட்டால், அவர்கள் பின்னாலேயே ஒடுவான். அவன் அழகனாயும் இருந்ததால், பல பெண்கள் அவனைக் காதலித்தனர்.


அடக்குவாரில்லாததால் அவன் திமிர்கொண்டு திரிந்துகொண்டேயிருந்தான். இரவிலும் பகலிலும் அவன் தந்தையின் வீட்டில் தங்குவதேயில்லை. வீதிதோறும், வீடுதோறும் திரிந்துகொண்டிருந்த அவனைப் பார்த்தவர்கள், தந்தை மண்டையைப் போட்ட பிறகு அவனுடைய நிலங்களையெல்லாம் இவன் ஒரே ஆண்டில் காலி செய்துவிடுவான். அவை ஒரு வருடங்கூட நிலைத் திருக்குமோ என்னவோ என்று பேசிக்கொள்வார்கள்.


நாளடைவில் சீட்டாட்டம், சூதாட்டம், மதுபானம் முதலியவைகளில் அவன் அதிகமாக ஈடுபடலானான். தந்தையோ அவனைக் கண்டிக்கவுமில்லை, தண்டிக்கவு மில்லை. ஒரு நாள் ஒரு குடியானவன் மகளிடம் காத்தான் தகாத முறையில் நடந்ததாக அவன் தந்தை கேள்விப்பட்டு,