பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆங்கிலேயர் அயர்லாந்திற் குடியேற்றங்களை ஸ்தாபிக்கும் போதெல்லாம் ஐரிஷ் மக்கள் தீரத்துடன் அதனை எதிர்த்துவந்தார்கள். குடியேற்றுபவர்களை ஆங்காங்கே கொலைசெய்தார்கள். பலரை உயிருடன் பிடித்து காது, நாக்கு என் பனவற்றை அறுத்து விடுவார்கள். இவ்வாறு காது, நாக்கு என்பவற்றை அறுத்துவிட்டு அனுப்புவதன் நோக்கமென்னவெனில் இவர்களைக் காணும் ஆங்கிலேயர் யாரும் குடியேற வரமாட்டார்கள் என்பதுதான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இராணுவத்தினரையும், குடியேற்றக்காரரையும் கொன்று தொலைப்பதில் மக்கள் அக்கறை காட்டினர்.

இங்கிலாந்திலிருந்து கொலைக் குற்றவாளிகள், திருடர்கள், காவாலிகள், வீதிகளில் அலைந்து திரிந்தோர் முதலான சனங்கள் அயர்லாந்திற் குடியேற்றப்பட்டும், இராணுவ சேவைகளில் அமர்த்தப்பட்டும் வந்தார்கள். இங்கிலாந்திலுள்ள குற்றவாளிகளின் வேட்டைக் களமாக அயர்லாந்தை ஆக்கினார்கள். ஆனால், ஐரிஷ் மக்கள் இந்த குற்றவாளிகளுக்கு தமது புனிதமண்ணில் தண்டனை வழங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். எப்படியோ ஆங்கிலேயரின் சவக்குழியாய் அயர்லாந்து இருந்தது.

மத்தியகால ஐரோப்பாவிற் தோன்றிய மதப்பிளவுக்கும் மதப்போருக்கும் அயர்லாந்து விதிவிலக்காகவில்லை. இங்கிலாந்து புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவியது. அயர்லாந்தில் ரோமன் கத்தோலிக்க மதமே வேரூன்றி இருந்தது. இந்த நிலையில் ஆங்கிலேயருக்கும் ஐரிஷ்காரருக்கிமிடையிலான போராட்டம் மதப்போராட்டமாகவும் மாறிவிட்டது. ஆட்சியாளர் புரட்டஸ்தாந்து மதத்தையும் ஆங்கில மொழியையும் ஐரிஷ் மக்கள் மீது திணிக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

ஒரு வல்லரசாக எழுச்சி பெற்று வந்த இங்கிலாந்து திட்டமிட்டு அயர்லாந்துக்கெதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதே வேளை ஐரிஷ் மக்கள் திட்டமின்றி, ஒருங்கிணைப்பின்றிச் சிதறுண்ட நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்ததால் ஆங்கிலேயர் மொழிமாற்றம், மத மாற்றம், குடியேற்றம் என்னும் அம்சங்களிற் குறிப்பிடத்தக்களவு வெற்றிகளை அடைந்தனர். வட அயர்லாந்து முழுவதிலும் ஐரிஷ் மொழி (Gaelic Language) கைவிடப்பட்டு ஆங்கில மொழி உபயோகத்திற்கு வந்தது. சிறு தொகையினர் புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவிக் கொண்டனர். இவ்வாறான மாறறங்கள் நிகழத் தொடங்கிய ஆரம்ப கட்டங்களில் ஐரிஷ் மொழியைக் கைவிட்டோர், ஆங்கிலக் கலாசாரம், உடைகள் என்பவற்றைப் பின்பற்றுவோர், மதம் மாறுவோர் என்போர்கத்தோலிக்க ஐரிஷ் மக்களால் ஆங்காங்கே கொல்

16