பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


அதில்தான்பிரீனை ஏற்று வைத்து கில்மல்லக் நகரத்தின் வழியாக ஓட்டிச் சென்றனர். வழியில் போலிஸாருடைய வீடுகளிருந்தன. அவற்றின் வழியாகவே கார் சென்றது. எப்படியாவது அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டியது அவசியமாயிருந்தது. கடைசியாக அவர்கள் மேற்கு லிமெரிக்கில் ஸீன்பின்னுடைய வீட்டையடைந்து அங்கு தான்பிரீனைச் செளகரியமாய்ப் படுக்கவைத்தனர். ஸீன் பின் அவனுடைய பழைய நண்பன். ஆதலால் அவனையும் அவன் தோழர்களையும் மிக்க அன்புடன் உபசரித்து வந்தான். பக்கத்திலிருந்து மற்றக் குடும்பத்தார்களும் அவர்களை அடிக்கடி வந்து பார்த்து வேண்டும். உதவிகள் செய்து வந்தார்கள்.

அங்கு தான்பிரீன் வெகுநாள் அமைதியாயிருக்க முடியவில்லை. பகைவர்கள் அவனைப் பற்றித் துப்பறிந்து நாலு பக்கத்திலும் நெருங்கி வந்து கெண்டிருந்தனர். தொண்டர்களில் பலர் தாங்களும் பல இடங்களிலிருந்து எதிரிகளைப் பற்றிய ரகசியங்களை அறிந்து வந்தனர். தான்பிரீன் அங்கிருந்து கெர்ரிக்குக் கொண்டுசெல்லப்பட்டான். அங்கு போன பின்பு வெகுவிரைவாகக் குணமடைந்து வந்தான். அவன் அடைந்த காயங்களால் இறந்தே தீரவேண்டும் என்பது இயற்கை வழியாகக் காணப்பட்டபோதிலும், அவன் பிடிவாதமாக இறக்க மறுத்து உயிர் வாழ்ந்து வந்தான். கெர்ரியிலிருக்கும் பொழுது அவன் சிறிது தூரம் நடக்கவும் முடிந்தது.

துன்பங்களின் நடுவே தான்பிரீனுக்கும் மற்றத் தோழர்களுக்கும் ஒரு பெரிய இன்பம் மட்டும் எப்பொழுதும் இருந்துவந்தது. எத்தனையோ துயரங்களின் நடுவிலும் அவர்களுடைய ஆருயிர் நண்பன் ஸீன் டிரீஸி வேடிக்கையாகப் பேசி அவர்களுடைய கவலைகளை மாற்றிச் சந்தோசப்படுத்தி வந்தான். நாக்லாங்கில் டிரீஸியில் வாயில் குண்டு பட்டதால், அவன் வெகுநாள் துன்பப்பட தேர்ந்துது. தான்பிரீனோ சுவாசப்பையிலும் உடம்பிலும் குண்டு பட்டுக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். டிரீஸி ஒருநாள் அவனைப் பார்த்து, நண்பா உன்னுடைய தலையை எனக்குக் கொஞ்சநாள் இரவல் கொடுத்து வாங்குவாயா என் வாய் புண்ணாயிருப்பதால் சாப்பிட முடியவில்லை. நம்வாய்களை மாற்றிக் கொள்வது நலம் என்று கூறினான். யாவரும் கொல்லென்று சிரித்தனர். மற்றொரு நாள் இரவில் அவர்கள் கல்வென் வழியாகத் திப்பெரிக்குச் சைக்கிள்களிற் சென்று கொண்டிருந்தனர். அந்தப் பிரதேசம் முழுவதும் ராணுவச் சட்டம் அமுலில் இருந்ததால் பட்டாளத்தார் எங்கும் திரிந்துக்கொண்டிருந்தானர். ஆதலால் அனைவரும் அதிக வேகமாய் சைக்கிள்களை ஓட்டிக்கொண்டு சென்றனர். அந்நிலையில் டிரீஸி 'ஒரு குண்டுசி வேண்டும் கழுத்தில் கட்டியுள்ள 'டை' காற்றில் பறக்கிறது. அதைச்சட்டையோடு சேர்த்துக் குத்துவதற்கு யாரிடமாவது ஒரு குண்டுசி இரக்குமா?’ என்று கேட்டான். கொஞ்சம் கூடப் பயமில்லாமல் நடு வீதியில் அவன் எல்லோரையும் நிறுத்தி விட்டதற்காக நண்பர்

88