பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி



மணி 11 க்கு மேலாகிவிட்டது. ஊரடங்கு உத்தரவு 12 மணி முதல் ஆரம்பம். டிராம் வண்டி பார்னல் ஸ்குயர் பக்கம் சென்றது. அப்பொழுது இரண்டு பக்கத்திலும் இருந்த கொலைஞரும் சட்டைப்பைக்குள் கைவிட்டு எதையோ எடுக்க முயன்றனர். தான்பிரீனுக்கு விஷயம் நன்றாக விளங்கிவிட்டது. உடனே அவன் தன் ரிவால்வரையும் சரேலென்று உருவிக் கையில் பிடித்துக் கொண்டான். அவனுடைய நோக்கமும் பகைவர்களுக்குப் புலனாயிற்று. மேற்கொண்டு. அங்கு தங்கினால் உயிருக்கு அபாயம் நேரும் என்று தெரிந்துகொண்டு வண்டியின் உட்புறத்திலிருந்த மூன்று கொலைஞரும், திடீரென்று எழுந்து ஒரு வர்மேல் ஒருவர் விழுந்து வெளியே குதித்து ஓடினர். தான்பிரீன் அவர்களைத் தொடர்ந்து சென்றான். ஆனால் அந்த இடத்தில் சுடுவது அபாயம் என்று கருதினான். அவன் சுட்டிருந்தால், வண்டியிலுள்ளவர்கள் கலவரமடைத்திருப்பார்கள். குண்டுகளின் ஓசை கேட்டுப் பக்கத்தில் எங்கேனும் நிற்கும் பீலர்களும் பட்டாளத்தாரும் அங்கு வந்து கூடியிருப்பார்கள். அதனால் தான்பிரீனுடைய உயிருக்கே ஆபத்து வந்துவிடும். தெருவும் பல மக்கள் நடமாடக்கூடிய தெரு வாயிருந்தது. தான்பிரீன் தெருவில் குதித்து, செயின்ட் ஜோசப் மாளிகைக்குப் பக்கம் அருகேயிருந்த ஒரு தெருவுக்கு விரைந்து சென்றான். அவன் செல்வதைக் கண்ட கொலைஞர் மூவரும் வேறொரு தெருவின் வழியாகச்சென்று, அவனைத் தெருவின் மறுபுறத்தில் மறித்துக் கொள்ளலாம் என்று கருதி ஓடினர். தான்பிரீன் அவர்களுடைய சூழ்ச்சியையறிந்து, அத்தெருவின் வழியே செல்லாமல் திரும்பி வந்து, தெருவில் அப்பொழுதுதான் வந்து நின்ற வயிட் ஹாலுக்குச் செல்லும் டிராம் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

அப்பொழுதுதான் அவனுக்கு முன்நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக் கச்சிறிது அவகாசம் ஏற்பட்டது. மூன்று பகைவர்களும் ஓடும் பொழுது வண்டியிலிருந்த மற்ற இருகொலைஞரும் ஏன் அவர்களுக்கு உதவிக்கு வராமல் இருந்துவிட்டனர் என்பது புலனாகவில்லை. தங்கள் உயிருக்கே அபாயம் நேரும் பொழுது, அவர்கள் தோழர்கள் என்றும் வேண்டியவர்கள் என்றும் கவனித்து உதவிசெய்ய வருவது வழக்கமில்லை போலும் கூலிக்கு மாரடிக்கும் ஒற்றர்களுக்குப் பொறுப்பேது? ஒழுக்கமேது?

அந்த ஐவரில் ஒருவன், பின்னால் தான்பிரீனும் தோழர்களும் டிராம் கொண்டராவில் இருந்ததை எப்படியோ அறிந்து பின் தொடர்ந்தான். அவன் அன்றிரவே தான்பிரீனுக்குப் பின்னால் வேறொரு டிராம் வண்டியிலேறிச் சென்று புலன் விசாரிக்கவுங்கூடும். தான்பிரீன் மறுநாள்காலையில் டிரீஸியிடம் தனக்கு நேர்ந்த விபத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது அவன், 'உன்காலம் நெருங்கி விட்டது போலிருக்கிறது; நீ இனிமேல் வெகுநாள் தப்பியிருக்க முடியாது, என்று வேடிக்கையாகக் கூறினான். ஆனால் பின்னர் இருவரும் அவ்விசயத்தைக் குறித்துத் தீர்க்கமாக ஆராய்ச்சி செய்தனர். அன்று முதல் வெளியே செல்வதானால் இருவரும் சேர்ந்து செல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்ட

120