பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

17
ஜெனரல் லூகாஸ்


லூகாஸ் என்பவர் ஆங்கிலப்படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவியிலிருந்தார். அவரையும் வேறு இரண்டு தளகர்த்தாக்களையும் புரட்சித்தலைவரான லியாம் லிஞ்ச் 1920ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி கைது செய்தார். அப்பொழுது லூகாஸ் கொன்னாவில் தம்முடைய நண்பர்களுடன் தங்கியிருந்தார். திடீரென்று லிஞ்ச் தமது படையுடன் அங்கே சென்று அவர்களைப் பிடித்துக் கொண்டார். லூகாஸுடன் கர்னல்ஸ் டான்போர்டும், கர்னல் டிரெல்லும் இருந்தனர். லிஞ்ச் அம்மூவரையும் அழைத்துக் கொண்டு சமீபத்தில் தயாராய்க்காத் திருந்த ஒரு மோட்டார்காருக்குச் சென்றார்.

பார்ட்டன் என்ற ஐரிஷ் தேசாபிமானி ஒருவர் ஆங்கிலயரின் சிறையிலிருந்தார். அரசாங்கத்தார் அவர்மீது ராஜத்துவேஷக் குற்றஞ்சாட்டிப் பத்து வருடத் தண்டனை விதித்தனர். சிறையில் கொலை, களவு செய்த குற்றவாளியைப் போல் அவரை மிகவும் கேவலமாக நடத்தி வந்தனர். அவரை விடுதலை செய்து வெளியே கொண்டுவருவதற்காகத்தான் லூகாஸ் கைது செய்யப்பட்டார். லியாம் லிஞ்ச், லூகாஸைப் பிடித்து வைத்துக் கொண்டு தங்களுடைய அன்பரான பார்ட்டனை விடுதலை செய்தால்தான் அவரை விடுதலை செய்யமுடியும் என்று சர்க்காருக்கு அறிவிக்கலாம் என்று கருதியிருந்தார்.

லிஞ்ச் தம்முடைய கைதிகள் மூவரையும் அழைத்துக்கொண்டு செல்லும் பொழுது அவர்கள் அரபி பாஷையில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்

111