பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





தானம் அளிப்பதைவிடச் சில சமயங்களில் இரக்கப்படுதல் மேலாகும். ஏனெனில், பணம் மனித இயல்புக்கு வெளியே யுள்ள பொருள். ஆனால், அநுதாபத்தை அளிப்பவன் தன் ஆன்மாவால் தொடர்பு கொள்கிறான். மனிதன் முதலாவது கற்கவேண்டிய சிறந்த பாடம் அநுதாபம் தன் சொந்த நன்மை அல்லாத பிற விஷயங்களுக்காக மனம் இளகாதவரை, ஒருவன் தாராளமான அல்லது பெருந்தன்மை யான காரியம் எதையும் சாதிக்க முடியாது. க டால்போர்டு அநுதாபத்தைப் போற்றி வளர்ப்போம். அது நல்ல பண்புகள் வளர்வதற்கு மனத்தைப் பண்படுத்துகின்றது. அநுதாப மில்லாமல் மரியாதை இல்லை. மனிதன் தன்னையும் தள் விஷயங்களையுமே பெரியனவாக எண்ணி, அவைகளாலான போர்வையால் தன்னை மூடிக்கொண்டு, மற்றவருடைய இன்பங்களிலோ துன்பங்களிலோ பங்கு கொள்ளாமல் உணர்ச்சியற்றுக் கிடப்பதைப் போல் இழிவானது வேறெதுவும் இல்லை. - அ. பீட்டி பண்போடு பொருந்தாத அநுதாபமெல்லாம் மறைமுகமான சுயநலமேயாகும். அ. காலெரிட்ஜ் அநுதாபம் இல்லையென்றால் எதுவும் இல்லை. க. ஏ.பி. ஆல்காட் ஃபாரடே என்பவர் எல்லா உலோகங்களிலும் காந்த சக்தி இருப்பதாகக் கண்டுபிடித்தார். அதுபோல், எல்லா உள்ளங் களிலும் அநுதாபம் இருக்கத்தான் செய்கிறது என்று சொல்லலாம். ஆனால், மறைந்து நிற்கும் அந்தக் குணம் 古

வெளிப்பட்டு வருவதற்கு, உலோகமானாலும் சரி. உள்ள o, மானாலும் சரி. ஒரளவு சூடேற வேண்டியிருக்கிறது.

ைபுல்வெர்

நண்பன் ஒருவன் என் துயரத்தில் பங்குகொண்டு. அ;ை A அற்பமாகக் குறைத்துவிடுகிறான். ஆனால், அவள்