பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ::: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் --

  • ஆனால் என்னும் வெறுக்கத்தக்க சொல் வந்துவிட்டால் முன்னால் சொன்னவையெல்லாம் வீணாகிவிடும். இல்லை

என்று மறுப்பதோ, அவமானப்படுத்துவதோ மேலாகும் அ டேனியல்

  • ஆனால் என்ற சொல் இரக்கத்தின் துடிப்புகளை நிறுத்திவிடும். அன்பு ததும்பும் சிந்தனைகளை அடைத்து விடும். சகோதரப்பான்மையுடன் செய்யும் வேலைகளை அடியோடு நிறுத்திவிடும்; ஆனால். ஆனால் என்ற சொற்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால், எவனும் தன் அண்டை வீட்டுக்காரனைக்கூடத் தன்னைப்போல எண்ணி,

நேசிக்கமாட்டான். அ புல்லர் ஆன்மா

  • உடல் வெறும் மண் ஆன்மா நித்தியமான முகை,

அ என். கல்வெர்வெல்

  • இந்த வாழ்க்கையுடன் நாம் தீர்ந்துவிடுவதில்லை; மரணத் திற்குப் பின் ஒவ்வொன்றும் தன் முந்திய முறைமையை அடைகின்றது. அ ருலோ
  • ஷேக்ஸ்பியரின் கற்பனையும், பேக்கனின் கல்வியும் கலிலியோவின் கனவும் எங்கே இருக்கின்றன? இத்தகைய பொருள்கள் அழிந்து ஒழியக்கூடாது என்று চা கருதுகிறேன். ஆனால், ஓர் உரோமம் பல நூற்றாண்டுகள் இருக்கின்றது. எகிப்து தேசத்துச் செங்கல் மூவாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கின்றது. மனிதனின் மனம் உடலாகிய களிமண்ணுக்குப் பின்னால், எஞ்சி( بسـا(ملاقوله وي. வாழ்கின்றது என்று நம்புவதே எனக்குப் போதும்

அ பி. கார்ன்வால்