பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 中 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் முதுமையடையும் பொழுது. அதனால் நிழல் எதுவும் தர (ԱՔԱԳ-աո5l. உ செஸ்டர்ஃபீல்டு

  • இங்கே நாம் தெரிந்துள்ளது சொற்பம், நாம் அறியாதது

× அளவற்றது. அ லாப்லேஸ் நான்கு மொழிகள் கற்றவன் நான்கு மனிதர்களுக்கு ஈடாவான் என்று ஐந்தாவது சார்லஸ் மன்னர் கூறினார். தமக்கு வாழ்வளித்த தம் தந்தை ஃபிலிப்பைக்காட்டிலும், தமக்கு அறிவளித்த குரு அரிஸ்டாட்டலுக்கே தாம் கடமைப் பட்டிருப்பதாக அலெக்சாண்டர் கூறியுள்ளார். பல கலைகளையும் பருக முயல்பவன் ஒரு கலையையும் பருகான். அ ஃபுல்லர் மனிதனை அறிவாளியாகச் செய்ய முடியாத அறிவின் பெரும் பகுதி. அவனை ஆணவம் பிடித்தவனாயும் பயனற்றவனாயும் செய்துவிடுகின்றது. அ அடிஎபன் அறிவின் பெருக்கத்திற்காகப் போடும் விடுமுதல் எப் பொழுதும் மிக உயர்ந்த வட்டியையே கொடுக்கும். அ ஃபிராங்க்லின் மானிட அறிவு, இறைவனின் ஆசியைப் பெற்று. நம்மைத் தெய்விக அறிவுக்கு அழைத்துச் செல்கின்றது. க. பிஷப் ஹார்ன் அறியத் தகாத விஷயங்களை அறியாதிருத்தல் அறிவுடைமை யின் ஒரு பகுதியாகும். க. கிரேட்ஸ் அறிவுடையார் எல்லாம் உடையார். ைதிருவள்ளுவர் சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. க. திருவள்ளுவர் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அ. திருவள்ளுவர்