பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, ζηττοφή"φυτώθ' 71 உண்டு. இதில் தெவிட்டுதலே இல்லை, மற்றவைகளில் புதுமைதான் இன்பமளித்ததே தவிர அவைகளின் தன்மை அன்று. தெவிட்டுதலால், காம விகாரமுற்றவர்கள் துறவிகளா வதையும். பேராசையுள்ள அரசர்கள் வெறுப்புற்று வருந்து வதையும் நாம் காண்கிறோம். ஆனால், அறிவுடைமையில் தெவிட்டுதலில்லை. அதைப்ப்ற்றிய திருப்தியும் ஆவலும் எளிதில் மாறிமாறி ஏற்படுகின்றன. அ பேக்கன் ஒவ்வொரு வழியிலும் அறிவைப் பெறுவது புத்திசாலித் தனமாகும். ஒரு குடிகாரன், ஒரு பானை, கையில் அணியும் உறை அல்லது பழைய செருப்பு ஆகியவற்றிலிருந்தும் அறிவு பெறலாம். க. ராப்லே மனிதன் பிரபஞ்சத்தின் பிரச்சினையைத் தீர்த்து வைப்ப தற்காகப் பிறந்தவனில்லை; தான் செய்ய வேண்டியதைக் கண்டுகொள்வதே அவன் கடமை; அவன் தனக்குத் தெரிந்த அளவின் எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். க. கதே அறிவுடைமை வலிமையைவிடப் பெரிது. இயந்திர நுணுக்கங்கள் தெரிந்தவன் வெறும் வலிமையைக் கண்டு சிரிக்கிறான். - ஜான்ஸன் அறிவை அளித்திருப்பதன் நோக்கம் அதை அடைத்து வைத்திருப்பதற்காக அன்று. ஆனால், பிறருக்கு அளிப் பதற்காக இந்த அரிய ஆபரணத்தை மறைத்து வைத்திருந் தால் அதன் பெருமையை இழந்ததாகும். அ பிஷப்ஹால் ஒரு மனிதனுடைய வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு அவன் என்ன செய்கிறான் என்பதைமட்டும் தெரிந்து கொண்டால் போதாது. அவன் எதை வேண்டுமென்றே செய்யாது விடுகிறான் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். வி சிளாட்ஸ்டன்