பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

- உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

பொய்யைத் துரத்திக்கொண்டு ஓடாதே நீ அதை விட்டுவிட்டால், அது விரைவில் தானாகவே செத்துவிடும்.

ைஇ. நாட்

என்னைப்பற்றித் தவறாக எண்ணும்படி செய்ய முயன்ற தற்காக அவதூறுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அது என்னை அதிக எச்சரிக்கையாயிருக்கும்படியும், என் செயல் களில் அதிகக் கவனமாயிருக்கும்படியும் செய்துள்ளது. க பென் ஜான்ஸன் தீயவனும் புரட்டனுமே போலிப் புகழில் மகிழ்ச்சியடைவர் அவதூறுக்கு அஞ்சி நடுங்குவர். அ ஹொரேஸ் மற்றவர்களின் தீய நாவுகளை அடக்கி வைக்க நம்மால் இயலாது; ஆனால், நாம் முறையாக வாழ்ந்தால். அவர்களை அலட்சியமாக ஒதுக்கிவிடலாம். அ கேட்டோ பழிச்சொல்லை எவரும் அழைத்து வந்து இருக்க இடம் கொடாமலிருந்தால், அது தானாகவே வாடி மடிந்துவிடும். க. லெப்ட்டன் உண்மையாயிருக்கத் தகாத விஷயத்தைப் பொய்யென்றே நம்பு. ைவெடிரிடன் துவேஷமூட்டும் வதந்திகளையும். ஆராய்ந்து பாராத செய்திகளையும். புறம் கூறித் திரிபவனை உன் கொடிய பகைவர்களுள் முதன்மையானவனாக எண்ணிக்கொள். க லவேட்டர் புறங்கூறுவோனையும். அவனுக்குச் செவி சாய்ப்பவனையும் சேர்த்துத் துக்கிலிடவேண்டும். ஒருவன் நாவிலே கயிற்றைக் கட்டியும். ஒருவன் செவிகளிலே கயிற்றையும் கட்டித் தொங்கவிட வேண்டும். ைவெளத்