பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, στωρωήνων/τιβ’ τί: 169 பிறரிடம் பழி வாங்க எண்ணுவதற்கோ, நமக்கு இழைக்கப் பெற்ற தீங்குகளை நினைத்துப் பார்க்கவோ, வாழ்க்கையில் நேரமில்லை. அது மிகச் சுருக்கமானது. ைசார்லட் பிரான்டி கோபத்திற்குச் சிறந்த மருந்து தாமதித்தல். அ லெனிகா அமைதியாயிரு. நீ எவரையும் வசப்படுத்திக்கொள்ள முடியும். அ ஸெயின்ட் ஜஸ்ட் கோபம் வெறிகொண்ட குதிரையைப் போல் துள்ளிப் பாய்கையில், இடையில் தடுக்கி விழும். ைலாவேஜ் வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். உள்ளேயடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும். அ புல்வெர் நீ கோபமாயிருந்தால். நீ பேசத் தொடங்குமுன் பத்துவரை எண்ணு. அதிகக் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணு. அ ஜெஃபர்ஸன் உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் பொழுது அறிவு வெளியே போய்விடும். அ எம். ஹென்றி கோபும் எழும்பொழுது. அதன் விளைவுகளை எண்ணிப்பார். அ கன்ஃபூவயெனில் பொறுமையுள்ள மனிதனின் கோபத்தைப்பற்றி எச்சரிக்கையா யிருக்க வேண்டும். கோழைத்தனம் கோழை தனக்கு மேலுள்ளவர்களிடம் கொஞ்சிக் குலவுவான். அந்தக் கோழையே. தான் விரும்பிய நேரத்தில் முரட்டுத் தனமாகவும் நடப்பான். ைஜூனியஸ் கோழைகள் தடுமாறுவார்கள். மேலான முறையில் துணிந்து வருபவர்கள் மூலமாகவே பெரும்பாலும் அபாயத்தை அடக்கி வெற்றி கொள்ளப் பெறுகின்றது. அ எலிஸபெத் மகாராணி