பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





உன்னைத் தாழ்த்திப் பேசும்போது, நீ அடக்கமாயிருத்தல் பெரிய காரியமன்று உன்னைப் புகழ்ந்துரைக்கும் பொழுது அடக்கமாயிருத்தல் அரிய பெரிய வெற்றியாகும். அ அர்ச், பெர்னார்டு கிறிஸ்தவன் முதிர்ந்து வரும் கதிரைப் போன்றவன் அவன் முதிர முதிரத் தன் தலையை அதிகமாகத் தாழ்த்திக் கொள்வான். -- கி. கத்ரி நீ இறைவனுடைய அருளையும். மனிதனுடைய அன்பையும். அமைதியையும் பெற வேண்டுமானால், உன் கண்முன்பே உன்னைத் தாழ்த்திக்கொள். உன் குற்றங்களுக்காக உன்னை மன்னித்துக்கொள்வதைக் குறைத்துப் பிறரை அதிகமாக மன்னித்து வரவேண்டும். அ லெய்ட்டன் உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு என்று நான் நம்புகிறேன். அ. ரஸ்கின் அடக்கம். இருளைப்போல் தெய்விக ஒளிகளைக் காண்பிக் கின்றது. - தோரோ சமயத்தில் முதல் விஷயம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டால், முதலாவது, இரண்டாவது. மூன்றாவது ஆகிய எல்லா விஷயங்களுமே அடக்கம் ஒன்றுதான் என்று நான் கூறுவேன். A அகஸ்டின் கஷ்டங்கள். நஷ்டங்கள் அடைந்த பின்பு மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.அ ஃபிராங்க்லின் ஆண்டவனுக்கு உகந்தவர்கள் ஏழைகளைப்போன்ற அடக்க முள்ள செல்வர்களும், செல்வர்களைப் போன்ற பெருந் தன்மையுள்ள ஏழைகளுமே ஆவர். அ ஸா அதி அடக்கமில்லாமல் நற்பண்புகளைச் சேகரிப்பதில் பயனில்லை அடக்கமுடையவர்களின் இதயங்களில் தங்கியிருப்பதிலேயே ஆண்டவனுக்கு மகிழ்ச்சி. அ எரர்ஸ்மஸ்