பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

23


ப. ராமஸ்வாமி :: 23 அதிருஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்தே சென்றுகொண்டிருப்பதைக் காணலாம். அ கோல்ட் ஸ்மித் துயரப்படுவோர்தாம் அதிருஷ்டத்தின் ஆற்றலை ஒப்புக் கொள்வர். இன்பமாயிருப்பவர்கள் தங்களுடைய வெற்றி களுக்குத் தங்கள் முன்யோசனையும் தகுதியுமே காரணங்கள் என்பர். ைஸ்விஃப்ட் அதிகாலையில் எழுந்திருந்து கடுமையாக உழைத்து முன் யோசனையுடன் நடந்துகொள்ளும் மனிதன் தன் வரு மானத்தில் கவனமுள்ளவனாகவும், கண்டிப்பான ஒழுக்க முடையவனாகவும் இருந்தால் அவன் துரதிருஷ்டம்பற்றிக் குறை சொல்வதை நான் கண்டதேயில்லை. நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கங்கள். இடைவிடாத ஊக்கம் ஆகியவைகளில் அமைந்த கோட்டைக்குள் துரதிருஷ்டம் செல்ல முடியாது. மூடர்களே துரதிருஷ்டம்பற்றிக் கனவு காண்பார்கள். உ அடிஎபன் வாழ்க்கையில் வெற்றியடைந்த மனிதர் அனைவரும் காரண காரிய இயல்பை நம்புபவர் எந்த விஷயமும் அதிருஷ்டத் தால் நேரிடுவதில்லை. நியதியின்படியே நிகழ்கின்றது என்று அவர்கள் நம்புகின்றனர். சங்கிலியின் முதலாவது கண்ணி யிலிருந்து கடைசிக் கண்ணிவரை எதுவும் பலவீனமாகவோ, அறுந்தோ இருக்கவில்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். அதுவே காரண காரியத் தொடர்பு. அ எமர்பைன் ஏதாவது ஏற்படும் என்று அதிருஷ்டம் எப்பொழுதும் காத்துக் கொண்டேயிருக்கின்றது. உழைப்பு. கூர்மையான பார்வை யுடனும் உறுதியான உள்ளத்துடனும் எதையாவது உற்பத்தி செய்யும். அதிருஷ்டம். கட்டிலில் படுத்துக்கொண்டு, தனக்கு ஏதாவது சொத்து வந்து சேர்ந்ததாகத் தபால்காரர் கடிதம் கொண்டுவருவார் என்று எதிர்பார்த்திருக்கும். உழைப்பு. காலை ஆறுமணிக்கே எழுந்து ஊக்கமுள்ள பேனாவாலோ,