பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

33


ப. ராமஸ்வாமி : 83 அபாயத்திற்கு அஞ்சுதல் அதைத் தடுக்கத் தூண்டுகோலாக வேண்டும் அச்சப்படாதவன் அபாயத்தை வெல்வது அரிது. == A குவார்லெஸ் அபாயம் மனிதனையும் விலங்கையும் ஒரே நிலைக்குக் கொண்டுவருகின்றது. அவசியம் வரும்பொழுது எல்லோரும் ஒன்றுதான். அ பைரன் அபாயத்தை அறவே விலக்குவதில் நாம் உறுதியில்லாத கோழைகள் என்று காட்டும்படி நாம் ஒரு போதும் செய்யக்கூடாது. ஆனால், அதே சமயத்தில், தேவையில்லாத முறையில் நாம் அபாயத்திற்கு உள்ளாகும்படியும் நடக்கக் கூடாது. அதைவிட அறிவீனம் வேறில்லை. அ லிலெரோ அபிப்பிராயம் நமது மன ஆர்வங்கள் எப்படியோ அப்படியே நம் அபிப்பிராயங்களும் இருக்கும். A கதே பெருங்கூட்டமான பொதுமக்களின் அபிப்பிராயம் என்பது நமக்கு இரண்டாவது மனச்சாட்சி போன்றது. சிலர் அதையே முற்றிலும் நம்பியிருப்பர். அ டபுள்யு. ஆர். ஆல்கெர் எல்லா அதிகாரமும் - உச்ச நிலையிலுள்ள் எதேச்சாதிகாரம் உட்பட - இறுதியாக அபிப்பிராயத்தையே சார்ந்து நிற்கின்றது. அ ஹியூம் நேற்று நான் சொன்னவைகளுக்கெல்லாம் மாறுபாடாயிருப் பினும், இன்று நான் எதை நம்புகிறேனோ அதைச் சொல்லியே தீருவேன். க வென்டல் ஃபிலிப்ஸ் எதேச்சாதிகாரத்தை அலைத்து ஆட்டக்கூடிய சக்தி ஒன்று மக்களிடம் இருக்கின்றது. அது மின்னல், புயல், பூகம்பம் ஆகியவைகளைவிட் மேலான ஆற்றலுள்ளது. அது நாகரிக உ. அ. - 3 -