பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 % உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் ★ = சீட்டு, பகடை சரக்குகள் ஆகிய எத்தகைய சூதாட்டமாயினும், ஒன்றுதான். அது பணத்திற்குப்போதிய ஈடு செலுத்தாமல் பணம் பெறுவதாகும். அ பீச்சர் சூதாட்டத்தில் மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் அருமையான காலத்தையும், செல்வத்தையும் நாம் இழக்கிறோம். அ ஃபெல்ட்ஹாம் ாணலை நெருப்பிலிருந்து தொலைவில் வைக்கவும் இளைஞனைச் சூதாட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும். அ ஃபிராங்க்லின் சூழ்நிலைகள் А A. A. செயல் А ஒருவன் சூழ்நிலைகளைத் தொடர்ந்து. தன்னைச் சுற்றியுள்ள ாAதிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே வார்த்தையில் சொன்னால், செய்யத்தக்கதைச் செய்யவேண்டும். க. அனடோல்ஃபிரான்ஸ் பெரும்பாலான ஆடவரும் பெண்டிரும் வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைக்கும் வழியிலேயே செல்கின்றனர்.அவர்கள் தங்கள் அனுபவங்களை ஆராய்ந்து தெரிந்துகொள்ள ஆசையோ ஒய்வோ பெற்றிருக்கவில்லை. சிலர் மட்டுமே மிக சிறந்த அனுபவ இலாபங்களை அடையத்தக்க பாதைகளை அமைத்துக்கொள்கின்றனர். அ ஸர் ஆர்தர்கித் சூழ்நிலைகள் பலவீனமானவர்களுக்கு எஜமானர்கள்: அறி வாளர்களுக்கு அவை கைக்கருவிகள். க. சாமுவேல் லோவர் சூழநிலைகள்! - நானே சூழ்நிலைகளை அமைத்துக் கொள்கிறேன். க நெப்போலியன்

  • - -

வாழ்க்கை நல்ல முறையில் வாழப்பெற்றதா என்பதை ஆண்டுகளைக்கொண்டு கணக்கிடாமல், செயல்களைக் கொண்டு கணக்கிட வேண்டும். ைஷெரிடன்