பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

u. grupaivanjareb) ::: 193 எந்த மனிதனும் தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்வதைக் காட்டிலும், மற்றவர்களால் ஏமாற்றப்பெறுவதில்லை அ. கிரேவில்லி எவ்வளவு அற்ப மனிதனாயிருந்தாலும், தன் கண்ணுக்கு அவன் பெரிய ஆசாமி'யாகவே தோன்றுவான் க ஹோம் அறிவாளிக்குத் தன் அறியாமை தெரியும் மூடன் தனக்கு எல்லாம் தெரியுமென்று எண்ணுகிறான். அ எலி லிம்மன்ஸ் அநேக மனிதர்கள் தங்களுடைய சொந்த நிழல்களைப் பார்த்துக் கொண்டே வாழ்க்கையைக் கழிக்கின்றனர். அதனால் நாளடை வில் தாங்களே தேய்ந்து நிழல்களாகிவிடுகின்றனர். அ ஹேர் கர்வம் முதன்மையான பெரிய பிரபு: நரகத்தின் ஜனாதிபதி, GLIm:مہا کھ செருக்கின் இருப்பிடம் இதயம், அங்கு மட்டுமே அது நிலைத்திருக்கின்றது. அங்கே இல்லாவிட்டால், அது பார்வை யிலோ, உடைகளிலோ தென்படாது. ...-; of)-ггтлгмийг «Яг л WTrт / செருக்கு அபினி மற்றும் விஷ மருந்துகளைப் போலச் சொற்ப அளவிலிருந்தால் நன்மை பயக்கும் பெரிய அளவில் கேடு விளைவிக்கும். தன்னிடத்திலே தனக்குத் திருப்தியில்லாதவன் மற்றவர்களை மகிழ்விக்க முடியாது. ைஎப். எபாண்டர்ஸ் செருக்கில் இந்த அளவு அல்லது அந்த அளவு அனுமதிக்கலாம். இல்லாவிடில் மனிதன் தன் பெருமையைக் காத்துக்கொள்ள முடியாது. பெருந்தீனி தின்பது தீதென்றால், உணவு இல்லாமல் முடியாது. குடிவெறியில் ஆழ்ந்துவிடுவது தீதென்றால் சொற்ப மது அருந்தாமலிருக்க முடியாது. தீமை, உண்பதிலும் மது அருந்துவதிலும் இல்லை. அளவு அதிகமாய்ப் போவதிலேயே இருக்கின்றது. அதுபோலவே செருக்கும். அ ஸெல்டன் உ. அ. - 13